கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி! 12 பேரின் உயிரை காவு வாங்கியது…!!

8 November 2019, 8:25 pm
Andhra Lorry Acc-UpdateNews360
Quick Share

ஆந்திர அருகே கட்டுப்பாட்டை இழந்தத கண்டெய்னர் லாரி சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர்.

சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் அருகே காட் ரோடு சாலையில் தண்ணீர் கேன்களுடன் கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் வேகமாக ஓடியது. சாலையில் சென்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மீது லாரி மோதியது. பயங்கர விபத்தில் ஆட்டோவில் இருந்த 6 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் பலியாகினர்.

மேலும் 4 பேர் படுகாயத்துடன் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.