சோனியா காந்தி குடும்பத்திற்கு “எஸ் .பி.ஜி.” பாதுகாப்பு – மத்திய பா.ஜ.க-வின் அரசு நடவடிக்கை

8 November 2019, 6:04 pm
SON-UPDATENEWS360
Quick Share

இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திராகாந்தி 1984-ம் ஆண்டு கொல்லப்பட்டதற்கு பின்னர், இந்திய பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாக, சிறப்பு படை பாதுகாப்புக்காக, “எஸ்.பி.ஜி” என்பது உருவாக்கப்பட்டது. இந்த படையானது, இந்தியாவின் பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களின் ஒட்டு மொத்த குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகின்றார்கள்.

இந்தியாவில், தற்போது சிறப்பு பாதுகாப்பு படையானது, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி போன்றோருக்கு சிறப்பு படையினரான, எஸ்.பி.ஜி அமைப்பின் பாதுகாப்பானது வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் தற்போது, சிறப்பு பாதுகாப்பு படையின், பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்ற, சோனியா காந்தி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு படையின் பாதுகாப்பினை, திரும்பப் பெற்றுக்கொள்ள மத்திய பா.ஜ.க-வின் அரசு தீர்மானித்துள்ளது. இனி சோனியா காந்தியின் குடும்பத்தாருக்கு, சி.ஆர்.ப்.எப். எனப்படும் துணை ராணுவப் படைகளின் மூலமான, ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வசதியினை இந்திய நாடு முழுவதும் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

முன்னாள் இந்தியாவின் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்புப் படை பாதுகாப்பு சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டது.

Leave a Reply