கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா : வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு அழைப்பு

8 November 2019, 5:34 pm
PK-UPDATENEWS360
Quick Share

கர்தார்பூர் வழித்தடம் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு, பல்வேறு சமயங்களுக்கும் இடையில் சமாதான தூதுவராக இருந்து வரும், வாழும் கலை அமைப்பின் தலைவரான, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு, பாகிஸ்தான் நாட்டின் சார்பில் முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீக்கிய மதத்தின் குருவானவரும், சீக்கிய மதத்தை தோற்றுவித்தவருமான, ஆச்சார்ய குருநானக் தேவ், தமது இறுதி காலத்தில், பாகிஸ்தான் நாட்டின், பஞ்சாப் மாகாணத்தில் அமைந்திருக்கும், பாகிஸ்தானில் தற்போது இருக்கின்ற, கர்தார்பூரில் வாழ்ந்து வந்ததாக, சீக்கிய மதத்தின், வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. சீக்கிய மதத்தின் குருவான ஆச்சார்ய குருநானக்கிற்கு, அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, “தர்பார் சாஹிப்”, என்கின்ற பெயரிலான, ‘குருத்வாரா ‘ ஒன்று அமைக்கப்பட்து உள்ளது.

கர்தார்பூர் மாகாணத்தில் இருக்கின்ற வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை திறந்து வைக்க இருக்கின்றார். இந்த சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்பு நிகழ்ச்சியில், பங்கேற்றிட வருமாறு இந்திய நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும், இந்திய பிரபலங்களுக்கும், பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டிற்கும், விசா வாங்கி , விஸா நடைமுறைகளை செயல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததன் காரணமாக, கர்தார்பூர் மாகாணத்தில் இருக்கின்ற கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையில் வழித் தடம் ஒன்றை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்து உள்ளது.

Leave a Reply