கேரட் விலை வீழ்ச்சி – மலைகளின் இளவரசிக்கு வந்த சோகம்!

7 November 2019, 2:05 pm
Kodaikanal Carrot-Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கேரட் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் உள்ள மேல்மலை பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. கேரட் விதை விதைத்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் காய்கறிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக கேரட் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகரித்து காணப்படுவதால், மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, வாழைக்காட்டு ஓடை ,அடிசரை உள்ளிட்ட மலை கிராமங்களில் கேரட் அறுவடை பணிகள் துவங்கி உள்ளது.

மேலும் ஊட்டி, மேட்டுப்பாளையம், மாலூர் பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட் வரத்து மதுரை மற்றும் திருச்சி, ஒட்டன் சத்திரம் போன்ற வெளியூர் சந்தைகளில் அதிகரித்து காணப்படுவதாலும் கொடைக்கானல் கேரட்டிற்கு விலை குறைந்துள்ளதாகவும், கிலோ ஒன்றிற்கு 10 முதல் 12ரூபாய் வரை மட்டுமே விலை கிடைப்பதாகவும் மலை கிராம விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply