தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் நியமனம்…!!!

18 November 2019, 10:36 pm
Rajagopal IAS appointed-Updatenews360
Quick Share

சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தலைமை தகவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,இவருக்கு பதில், ஆளுநரின் செயலராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ்., நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராஜகோபால், 1984ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மேலும், தற்போது கவர்னரின் செயலராக இருந்த இவர், தலைமை தகவல் ஆணையராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.