இன்ஃபோசிஸ் நிறுவன செயல் திட்டம் : நவீன தொழில்நுட்ப இணக்க வருவாய் பெருக்க நடவடிக்கை

8 November 2019, 12:39 pm
INFY-UPDATENEWS360
Quick Share

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான வி.பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெரும்பாலான அதனுடைய, இடை நிலை ஊழியர்களின் எண்ணிக்கையினை கட்டாயம் குறைத்தாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது லாபத்தை தக்கவைக்க வேண்டுமென்றால், நிறுவனத்திற்கு உபயோகமற்ற ஊழியர்களை குறைக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிரவும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில், தொழில் நுட்பக் கட்டமைப்பானது அடுத்த கட்ட நிலைக்கு மாற்றம் அடைந்து கொண்டிருப்பதற்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொள்ளுகின்ற வகைக்கான ஏற்ற ஊழியர்கள் மட்டும் தான், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, இனி வருகின்ற காலங்களில் தேவைப்படுவார்கள் என்றும், இது போன்ற சூழ்நிலையில், புதிய தொழில் நுட்பங்களில் அறிமுகங்கள் மற்றும் தகுந்த ஏற்ற பரிச்சயமற்ற ஊழியர்களின் எண்ணிக்கையினை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகவும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த காரணங்களினால், 5 % முதல் 10 % சதவிகிதம் அளவில், நிறுவனத்தின் இடைநிலை ஊழியர்களை குறைத்தாக வேண்டிய நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி அவர் குறிப்பிட்ட போது, தற்போது இந்தியா பொருளாதார ரீதியான நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வந்தாலும் கூட, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின், வளர்ச்சியில் பெருமளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை என்றும், ஆகவே தற்போது நிலவி வருகின்ற பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்வதற்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இன்னும் அதிகமான அக்கறையுடனும், கவனமுடனும் நிறுவன செயல்பாடுகளை கையாண்டால், எதிர் வருகின்ற வருடத்திலும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியானது சிறப்பாக குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply