கனரா வங்கி : நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு லாபம் 14 % அதிகரிப்பு

8 November 2019, 7:46 pm
CAN-UPDATENEWS360
Quick Share

இந்திய அரசுக்கு சொந்தமான, பொதுத் துறை வங்கியான, கனரா வங்கி தனது நடப்பு நிதியாண்டின், 2 -வது காலாண்டின் லாபமானது, 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கனரா வங்கியின் சார்பில், மும்பை பங்குச் சந்தையில் தெரிவித்துள்ள தகவலில், கனரா வங்கியின் நிதிநிலை கணக்கீட்டின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலாண்டான ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில், கனரா வங்கியின் நிகர வருவாயானது, 15,509.36 கோடி ரூபாயாக இருந்தது என்றும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ஒட்டும்கொதித்த வருவாயானது, 13,437.83 கோடி ரூபாய் என்கின்ற அளவுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் லாபமானது, அதிகமாகும்.

கனரா வங்கியின், நிகர லாபம் 356.55 கோடி ரூபாயிலிருந்து, 14 % சதவிகிதம் அதிகரித்து 405.49 கோடி ரூபாயாக, இருந்தது. நடப்பு நிதியாண்டில் கனரா வங்கியின், மொத்த வாராக் கடன் விகிதமானது, 10.56 % சதவிகிதத்திலிருந்து, 8.68 % சதவிகிதமாகவும், நிகர வாராக் கடன் விகிதமானது, 6.54 % சதவிகிதத்திலிருந்து, 5.15 % சதவிகிதமாகவும், குறைந்துள்ளது. அதனை அடுத்து, அதற்கான ஒதுக்கீடாக, 2,406.84 கோடி ரூபாயிலிருந்து, 2,297.43 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

Leave a Reply