சீன அமெரிக்க வர்த்தக போர் : சர்வதேச பொருளாதாரம் நேரடியாக பாதிப்பு – ஐ.நா. வர்த்தக பிரிவு ஆய்வு அறிக்கை

8 November 2019, 4:38 pm
CH-UPDATENEWS360
Quick Share

அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் இடையில், நிகழ்ந்து வருகின்ற வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்கா உடன் நிகழ்த்தப்படுகின்ற இந்திய ஏற்றுமதியின் அளவானது தற்போது உயர்ந்து இருக்கின்றது.

இந்தியாவில், நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதி காலாண்டில், 755 மில்லியன் டாலர் அளவில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி அளவானது கூடுதலாக மேற்கொண்டிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம், மற்றும் முதலீடு சார்ந்த ஆய்வு மையமானது, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் புள்ளி விபரமானது வெளியிடப்பட்டு உள்ளது. வேதிப் பொருட்கள், உலோகங்கள், தாதுப் பொருட்கள் போன்றவற்றை இந்தியா அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தற்போது வர்த்தகப் போர் நிலவி வருகின்றது. சீன நாட்டின் பொருட்களுக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பும், அமெரிக்கப் பொருட்களுக்கு சீன நாட்டின் வரி விகிதத்தை கடுமையாகவும் உயர்த்தி இருக்கின்றன. இந்த அதிகப்படியான வரி விதிப்பு நடவடிக்கையின் காரணமாக, அமெரிக்க மற்றும் சீன நாடுகளும் பாதிப்பைச் சந்தித்து இருக்கின்றன. மேலும், சீனாவின் பொருட்களின் ஏற்றுமதி அளவானது, அமெரிக்காவில் குறைந்து விட்ட காரணத்தால், அந்த வாய்ப்புக்கள் மற்ற பிற நாடுகளுக்கும் கிடைத்து ன்வருகின்றது.

அமெரிக்க உடனான சீனாவின் வரதகமானது, 21 பில்லியன் டாலர் அளவில் திசை மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா உடன் சீனா மேற்கொண்டு வந்த வர்த்தகமானது, வேறு நாடுகளுக்கு வழி மாற்றப்பட்டுள்ளது. தைவான், மெக்ஸிகோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் பெரும் பயன் அடைந்திருக்கின்றன. இந்தியா, கொரியா, கனடா ஆகிய நாடுகள் குறைந்த அளவில் பயன் அடைந்தாலும், அமெரிக்கா உடனான வர்த்தகமானது, 0.9 பில்லியன் டாலர் தொடங்கி 1.5 பில்லியன் டாலர் வரையிலும் உயர்ந்து இருக்கின்றது.

சர்வதேச அளவில் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடான சீனாவுடனான வர்த்தகப் போரின் காரணமாக, இந்தியா நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதி காலாண்டில், அமெரிக்காவுக்கு 755 மில்லியன் டாலர் அளவிற்கான கூடுதலான ஏற்றுமதிகளை நடப்பு நிதியாண்டில், மேற்கொண்டுள்ளது. வேதிப் பொருட்கள் 243 மில்லியன் டாலர் அளவிலும், தாது உலோகங்கள் 182 மில்லியன் டாலர் அளவுகளிலும், மின் இயந்திரங்கள் 85 மில்லியன் டாலர்கள் அளவிலும், ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், வேளாண் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதியும் உயர்ந்து இருக்கின்றன.

சீயென நாடானது, நடப்பு நிதி ஆண்டின், தனது முதல் காலாண்டில், 35 பில்லியன் டாலர் அளவிலான அமெரிக்கா நாட்டினுடனான ஏற்றுமதியை தற்போது இழந்து இருக்கின்றது. இந்த இரு நாடுகளுக்கிடையே நிகழுகின்ற வர்த்தகப் போரின் காரணமாக, சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளைம் மட்டுமல்லாமல், சர்வதேச பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிக்கின்றது என்கின்ற புள்ளிவிபர ஆய்வறிக்கையை, ஐக்கிய நாடுகளின் வர்த்தக அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply