சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி : இந்திய வீரர்கள் ஏமாற்றம்

8 November 2019, 3:51 pm
sai praneeth - updatenews360
Quick Share

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், மற்றொரு இந்தியர் சாய் பிரனீத் ஆகியோர் போராடி தோற்றார்.

சீனாவின் புஜோவ் நகரில் நடந்து வரும் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் தோல்வியடைந்தார். இந்த நிலையில், மற்றொரு இந்திய வீரரான இந்திய வீரர் சாய் பிரனீத், டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டன்செனிடம் 20-22, 22-20, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதன்மூலம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர்கள், சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து வெளியேறினர்.

இதேபோல, ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி காலிறுதியை எட்டியது.

Leave a Reply