வங்கதேசத்திற்க்கெதிரான 2-வது ‘ட்வென்டி -20’ போட்டி : இந்தியா 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி

8 November 2019, 10:15 am
RO-UPDATENEWS360
Quick Share

வங்கதேச அணிக்கு எதிரான, இரண்டாவது ‘ட்வென்டி-20’ போட்டியில் கேப்டன் ரோகித் அரை சதம் எடுத்ததன் காரணமாக, இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் மூன்று ” ட்வென்டி -20 ” போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் ட்வென்டி-20 போட்டியில், இந்தியா 0-1 என பின் தங்கி இருந்தது. இரு அணிகளும் மோதிய இரண்டாவது ட்வென்டி -20, போட்டியானது, குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில், ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

வங்கதேச அணியில், லிட்டன் தாஸ் 29 ரங்களும் , முகமது நயீம் 36 ரன்களும் எடுத்தனர். சவுமியா சர்கார், மகமதுல்லா ஆகியோர், தலா 30 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணியானது, 20 ஓவரில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சகால் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அபார துவக்கம் கொடுத்தனர்.வாங்க தேச பந்து வீச்சை சிதறடித்த ரோகித், தனது அரை சததை கடந்திட்டார். முதல் விக்கெட்டு ஜோடியாக,118 ரன்கள் சேர்த்திருந்த போது, ஷிகர் தவான் 31 ரங்களில் ஆட்டமிழந்தார். ரோகித் 85 ரன்களில் அடம் இழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் கைகொடுத்த காரணத்தாலும், இந்திய அணி தனது, 15.4 ஓவர்களில், 2 விக்கெட்டு இழப்பிற்கு,154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது, ட்வென்டி போட்டியானது, வருகின்ற 10-ம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.

Leave a Reply