வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.!

7 November 2019, 10:30 pm
Rohit played on 100th odi match-Updatenews360
Quick Share

ராஜ்கோட்: வங்க தேச அணிக்கு எதிரான இரண்டவாது டி 20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றுள்ளது. 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 154 ரன்களை வங்கதேச அணி இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக ஆட்டத்தை காட்டியது. இதில், 15.4ஓவரில் இலக்கை எட்டியுள்ளது. இந்திய அணி வீரர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 43 பந்துகளில், 6 சிக்சர், 6 பவுண்டி உட்பட 85 ரன்களை எடுத்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் கட்டாயம் இந்தியா வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருந்தது. இதில் இந்தியா போட்டியின் துவக்கம் முதலே வானவெடிக்கை காட்டியது.

Leave a Reply