அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளியே வராதீங்க.. 14 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
28 November 2023, 9:13 am
Quick Share

தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் டிச.,3ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 185

0

0