தலைக்கேறிய போதையில் பள்ளிக்கு வந்த 4 அரசு பள்ளி மாணவர்கள்.. வகுப்றையில் கல் வீசியதால் பரபரப்பு.. ஸ்பாட்டில் எடுத்த ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 4:37 pm
Govt Schol -Updatenews360
Quick Share

தலைக்கேறிய போதையில் பள்ளிக்கு வந்த 4 அரசு பள்ளி மாணவர்கள்.. வகுப்றையில் கல் வீசியதால் பரபரப்பு.. ஸ்பாட்டில் எடுத்த ஆக்ஷன்!!

விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் பள்ளிக்கு வந்த ஐயனார், ஆகாஷ், வேலாயுதம், வெங்கடேசன், ஆகிய நான்கு பேரும் குடிபோதையில் வந்து பள்ளி வகுப்பறையில் கற்களை கொண்டு அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் வகுப்பறையில் இருந்த மாணவ மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த போது பள்ளி தலைமை ஆசிரியர் உதயசூரியன் வளாகத்தின் கதவை மூடி அவர்கள் நான்கு பேரையும் பிடித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து ஒப்படைத்தனர்.

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இதே பள்ளியில் போதையில் 8 மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவரை தாக்கியதில் மாணவன் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 492

0

0