கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 7 பேர் மாயம் : ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்… கரை ஒதுங்கிய சடலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 1:13 pm
College Student Missing in Sea Rough - Updatenews360
Quick Share

ஆந்திரா : கடலில் குளிக்க சென்ற பொறியல் கல்லூரி மாணவர்கள் 15 பேரில் ஏழு பேர் மாயம். ஒருவர் உயிருடனும் மற்றொருவர் பிணமாகவும் கடலோ காவல்படையினர் மீட்டனர்.

ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் புடிமடக்க கடற்கரைக்கு நேற்று அனக்கா பள்ளி பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் குளிக்க சென்றனர். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களில் ஏழு பேரை அலை இழுத்து சென்றது.

உடனடியாக மற்ற 8 மாணவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேஜா என்ற மாணவர் உயிருடன் மீட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆறு பேர் காணாத நிலையில் அவர்களை தேடும் பணி மும்பரமாக நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்த வேலையில் பவன் என்ற மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.

மேலும் ஐந்து பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.

Views: - 518

0

0