கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த கார்: மணமகன் உள்பட 9 பேர் பலியான சோகம்..!!

Author: Rajesh
20 February 2022, 12:59 pm
Quick Share

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து காரில் உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நயாபுரா கல்வெட்டில் இருந்து கீழே கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா நகர மீட்புப்படையினர் காரிலிருந்து 7 உடல்களையும் தண்ணீரில் இருந்து 2 உடல்களையும் மீட்டனர்.

ஆற்றில் கவிழ்ந்த அந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்து இன்று காலை நடைபெற்றது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருமணத்திற்கு சென்ற வழியில் மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 855

0

0