அதீத நம்பிக்கையில் 50 தடவ மொட்டை போட்ட அஜித்… அப்பவும் அட்டர் ஃபிளாப் ஆன படம்!

Author: Rajesh
5 December 2023, 1:28 pm
ajith
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் திரை பின்பலமே இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கோடிக்கணக்கில் ரசிகர்களை சம்பாதித்தவர். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட்டு நடித்து பிரம்மிக்க செய்திடுவார்.

அப்படித்தான் அஜித் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெட். இப்படத்தில் மிகப்பெரிய தாதாவாக நடித்திருந்த அஜித் தனது தோற்றத்தை வித்யாசமாக கொண்டுவர கடுமையான முயற்சிகள் எடுத்தாராம். முதலில் மொட்டையடித்து ரகாடான தோற்றத்தை கொண்டுவர திட்டமிட்டாராம்.

ஆனால், மொட்டை அடித்ததும் சிட்டிசன் அஜித் போலவே இருந்தாராம். அதனால் மொட்டை தலையை கொஞ்சம் நாட்கள் அப்படியே விட்டு சொரசொரப்பாக முடி வளர்ந்ததும் ஆஹா இது ஓகே என கூறி பின்னர் ஷூட்டிங் சென்றாராம்.

அதே போல் படம் முழுக்க லைட்டான மொட்டைத்தலையுடன் வலம் வந்த அஜித் கிட்ட 50 தடவைக்கு மேல் மொட்டையடித்திருப்பார் என கூறப்படுகிறது. அப்படி கஷ்டப்பட்டு நடித்தும் என பலன்? படம் வெளியாகி அட்டர் பிளாப் ஆனது தான் மிச்சம். ஆனாலும், அஜித் நடித்ததில் அவருக்கு மிகவும் பிடித்த படத்தில் ஒன்று ரெட் திரைப்படம் தானாம்.

Views: - 164

0

0