நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலியா இது..? வைரலாகும் அவருடைய லேட்டஸ்ட் வீடியோ..!

Author: Rajesh
18 May 2022, 12:30 pm
Quick Share

நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என உண்டபிறந்த சகோதர, சகோதரி உள்ளார்கள். நடிகை ஷாமிலி கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.

இதன்பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி Oye! எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், தமிழில் விக்ரம் பிரபு நடித்து வெளியான வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஷாமிலி, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மார்டன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Views: - 995

4

3