கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல் இருக்கும் தமிழக அரசே…: சூட்டோடு சூடாக அண்ணாமலை கேட்ட கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 8:02 pm
Annamalai Stalin - Updatenews360
Quick Share

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.

ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின.

இதையடுத்து கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி ரூ.6 குறைக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை குறைத்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்த மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றி. கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க் கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என
தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Views: - 519

1

0