அழகை அதிகரிக்க இரவு தூங்கும் முன்பு என்ன செய்யலாம்? உங்களுக்கான 4 சிம்பிள் டிப்ஸ் இதோ !

25 March 2020, 9:30 pm
beauty tips updatenews360
Quick Share

தினமும்   வேலைக்கு மற்றும்   கல்லூரிக்கு செல்லும் சில  பெண்களுக்கு முகத்தை அழகுபடுத்த   நேரம் இல்லாமல் இருப்பார்கள்.அவர்களுக்கும்   மற்றவர்களை போலவே தங்கள் முகத்தை அழகுபடுத்திக்  கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான   நேரம் இல்லாமல் இருக்கும். இனி நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட   வேண்டாம். இதற்காக நீங்கள் அழகு நிலையங்களுக்கு சென்று அதிகம்   செலவிடத் தேவையில்லை. வீட்டிலேயே இயற்கையான முறையில் முகத்தை அழகுபடுத்துவது எப்படி   என்பதை இதில் காண்போம்.   

1 . ரோஸ் வாட்டரில்  சிறிதளவு பால்   சேர்த்து கலக்கிக்   கொள்ளுங்கள். பின்பு   இதை முகத்தை தடவி ஊற   வையுங்கள். உறங்கும் முன்பு   இதை செய்ய வேண்டும். பின்பு   மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த   நீரால் கழுவிக் கொள்ளலாம். இதனால் சருமத்தில் உள்ள   கருமை நிறம் மறைந்து முகம் வெள்ளையாக பளிச்சென்று மாறிவிடும்.  இதை வாரத்திற்கு மூன்று முறை செய்தால் போதும், சருமம் நன்றாக மின்ன  செய்யும்.

makeup tips updatenews360

2 . சந்தனம் உங்கள்   முகத்திற்கு தேவையான  அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு   அதனுடன் பன்னீர் தேவையான அளவு சேர்த்து   கரைத்துக் கொள்ளவும். இவற்றை நன்கு குழையும் படி  கரைத்துக் கொள்ளவும். பின்பு இதை உறங்கும் முன்பு   முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். பின்பு காலையில்   எழுந்து முகத்தை அலசிக் கொள்ளவும். பன்னீர் மற்றும் சந்தனம்   முகத்திற்கு மணத்தை தருவது மட்டுமில்லாமல், பளீச் நிறத்தையும் தர   உதவி புரிகின்றது. எனவே இதை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தி வந்தால்   போதும் சருமம் மென்மையாகவும், பளபளவென்றும் மாறிவிடும்.

3 . வெள்ளரிக்காயை  தண்ணீர் ஊற்றாமல்   அரைத்துக் கொள்ளவும். இந்த   பேஸ்டை உறங்க போவதற்கு முன்பு   உங்கள் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.  பின்பு இதை காலையில் வெதுவெதுப்பான நீரில்   முகத்தை கழுவிக் கொள்ளலாம். இந்த கலவை முகத்திற்கு   குளிர்ச்சியை தருவது மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல   நிறத்தையும் தர உதவுகின்றது. இதை நீங்கள் வாரத்திற்கு மூன்று   முறை செய்து வந்தால் போதும் முகம் பிரஷ்-ஆகவும் இளமையாகவும் இருக்கும்.

4 . இரவு   உறங்க போவதற்கு   முன்பு முகத்தில்   பாதாம் எண்ணெயை தேய்த்து   மசாஜ் செய்து, பின்பு முகத்தில்   தடவி விட வேண்டும். காலையில் சோப்பு   போட்டு முகத்தக் கழுவிக் கொள்ளலாம். இதனால்   உங்களுடைய சருமம் மென்மையாகவும், ஈரப்பத தன்மையுடனும்   இருக்கும். இதை நீங்கள் தினமும் முகத்திற்கு அப்ளை செய்து   வந்தால், சருமத்தில் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணரலாம்.