இரவு தூங்கும் முன்பு இந்த எண்ணெயை ஒரு சொட்டு தடவுங்க… காலை எழுந்து பார்க்கும் போது முகம் செம அழகா மாறிடும்!!!

2 November 2020, 9:28 pm
Quick Share

நமது முகமானது எந்தவொரு பரு, வடு இல்லாமல் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். நிறம் நிச்சயமாக ஒரு குறையல்ல. பார்ப்பதற்கு முகம் கலையாக இலட்சனமாக இருக்க வேண்டும். அது தான் அழகும் கூட. கரும்புள்ளிகள், பருக்கள், வடுக்கள் இல்லாமல் முகம் கொலுக் மொலுக்கென்று அழகாக இருந்தாலே நமக்கு கூடுதல் தன்னம்பிக்கை கிடைக்கும் என்று சொல்லலாம். 

அப்படி உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பளிங்கு போன்ற முகத்தை பெற உதவும் ஒரு அற்புதமான தீர்வை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். இதனை செய்வதற்கு 50ml மரச்செக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கேரட் ஆகிய இரண்டு பொருட்கள் நமக்கு போதும். முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். 

கடாயில் 50ml தேங்காய் எண்ணெயை ஊற்றி அது சூடாவதற்கு முன்பாக ஒரு கேரட்டை துருவி சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் கேரட்டை ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். கேரட் கருகி விடாமல் இருக்க கை விடாமல் வதக்க வேண்டும். கேரட் வதங்கிய உடன் அதனை ஆற வைத்து கொள்ளலாம். கேரட் ஆறியதும் ஒரு சுத்தமான காட்டன் துணியை விரித்து கேரட்டை அதில் போடவும். 

துணியை உங்கள் கைகளால் நன்றாக பிழிந்து எண்ணெயை தனியாக பிரித்து எடுக்கவும். 50ml எண்ணெய்க்கு மொத்தமாக ஏழில் இருந்து எட்டு தேக்கரண்டி கேரட் எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய் பார்ப்பதற்கு தங்க நிறத்தில் இருக்கும். ஒரு சிறிய பாட்டிலில் இந்த எண்ணெயை ஊற்றி வைத்து கொள்ளுங்கள். 

இப்போது இந்த எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். இந்த எண்ணெயில் இருந்து இரண்டு சொட்டு எடுத்து உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடலாம். அடுத்த நாள் காலை எழுந்து எப்போதும் போல முகத்தை கழுவி கொள்ளுங்கள். 

இந்த வழக்கத்தை தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் செய்து வந்தாலே உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே கவனிக்க தொடங்குவீர்கள். இந்த எண்ணெய் முகத்திற்கு நல்ல நிறத்தையும், பொலிவையும் தரும். கழுத்து, முட்டி பகுதி கருப்பாக இருந்தால் அந்த இடத்தில் கூட இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி விடும். நிச்சயமாக இந்த குறிப்பை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Views: - 47

0

0