தலைமுடிக்கு பிளீச்சிங் செய்பவரா நீங்கள்… உங்களை எச்சரிக்கும் ஐந்து விஷயங்கள்!!!

28 January 2021, 9:37 pm
Quick Share

தலைமுடிக்கு வித விதமாக கலர் அடிப்பது, பிளீச்சிங் செய்து கொள்வது எல்லாம் தற்போது டிரெண்டாகி விட்டது. அது மட்டும் இல்லாமல் இது இன்றைய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது என கூறலாம். இவ்வாறு தலைமுடிக்கு கலர் அடித்து பிளீச்சிங் செய்து கொள்வதால் தங்களது அழகு தோற்றம் மேம்படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இதனை செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் ஏராளம். அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1. முடி சேதாரம்:

தலைமுடியை பிளீச்சிங் செய்வது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான எண்ணெய் வடிதல், அழுக்கு சேர்தல், கடுமையான UV தாக்கம் ஆகியவை தலைமுடியை பொழிவிழக்க செய்து விடும். இதன் காரணமாக தலைமுடி உதிர்வது, சிக்கு உருவாகுதல், முடி வெடித்து போதல் ஆகியவை ஏற்படும். 

2. ஈரப்பதத்தை இழக்கும்:

தலைமுடிக்கு மிகவும் முக்கியமான எண்ணெய் மற்றும் ஈரப்பதம் இல்லாமல் போய்விடும். இதனால் மயிர்க்கால்கள் வறண்டு போகும். இதன் விளைவாக தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து சீரான முறையில் கிடைக்காமல் போகலாம். பிளீச்சிங் செய்யும் போது அதிலுள்ள இரசாயனங்கள் தான் இதற்கு காரணம். 

3. மயிர்க்கால்கள் சேதம்:

பிளீச்சிங் செய்வதால் தலைமுடி வேர்கள் பலவீனமாகி விடும். இது எரிச்சலை உண்டாக்கும். கெமிக்கல்களால் உண்டாகும் அலர்ஜி இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

4. பராமரிப்பு முக்கியம்:

பியூட்டி பார்லருக்கு சென்று பிளீச்சிங் செய்து விட்டால் வேலை முடிந்து விட்டது என இருந்து விட கூடாது. அதன் பிறகு செய்யும் பராமரிப்பு தலைமுடியை சேதத்தில் இருந்து காப்பாற்றும் . ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் பராமரிப்பிற்கு பிளீச்சிங் செய்ததை விட கூடுதல் பணம் செலவாகும் என்பது தான். 

5. நிறம் மாற்றம்:

அடிக்கடி நீங்கள் தலைமுடியை கலரிங் செய்யும் போது தலைமுடியின் இயற்கை நிறமே மாறி விடும். அது போல நீங்கள் கலரிங் செய்த நிறமும் சில நாட்களுக்கு பிறகு மங்க தொடங்கி விடும். அந்த நேரத்தில் முடியின் அழகு கெட்டுப்போய் விடும். இது உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும். அது போல நீங்கள் வீட்டிலே கலரிங் செய்யும் நபராக இருந்தால் அதனை ஒழுங்காக செய்யாமல் இருப்பது ஆங்காங்கே திட்டு திட்டாக அசிங்கமாக தெரியும்.

Views: - 0

0

0