தினம் ஒரு கலரில் நெயில் பாலிஷ் வைப்பவரா நீங்க… இதோ உங்களுக்காக இயற்கை நெயில் பாலிஷ் ரிமூவர்!!!

23 February 2021, 9:37 pm
Quick Share

பெண்களுக்கு தங்களை அழகுபடுத்தி பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும். தலை முதல் பாதம் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனித்து கொள்வார்கள். அந்த வகையில் ஒரு சிலர் தினம் ஒரு கலரில் நெயில் பாலிஷ் வைத்துக்கொள்வது உண்டு. ஆனால் அவ்வாறு வைக்கும் போது முந்தைய நாள் வைத்த நெயில் பாலிஷை அழிப்பது என்பது ஒரு பெரிய வேலை தான். 

இதனை சுலபமாக்க தற்போது கடைகளில் நெயில் பாலிஷ் ரிமூவர் கிடைக்கிறது. ஆனால் இது நகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கையான முறையில்  எளிதாக நெயில் பாலிஷை எப்படி அழிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1. டூத் பேஸ்ட்:

நெயில் பாலிஷ் ரீமூவர்களில் காணப்படும் எத்தில் அசிடேட் டூத் பேஸ்டில் உள்ளது. இது அசிட்டோன் இல்லாத நெயில் பாலிஷ் ரிமூவர் போல செயல்படுகிறது. சிறிதளவு டூத் பேஸ்ட்  எடுத்து அதனை நகங்கள் மீது வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து துடைத்து எடுக்கவும்.

2. எலுமிச்சை:

எலுமிச்சை பழத்தில் அமிலத்தன்மை உள்ளது. இது நகங்கள் மற்றும் நெயில் பாலிஷில் ஊடுருவும் தன்மையை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்த முதலில் சோப்பு நீரில் உங்கள் கைகளை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு எலுமிச்சை துண்டு கொண்டு நகங்களை தேய்க்கவும். 

3. ஆல்கஹால்:

நீண்ட நாட்களாக நெயில் பாலிஷை அழிக்காமல் இருப்பது ஒரு சில சமயங்களில் தொற்று ஏற்படுத்தி விடும். அந்த சமயத்தில் நெயில் பாலிஷ் ரிமூவர் வேலைக்கு ஆகாது. இதற்கு ஆல்கஹால் தான் சரியாக இருக்கும். முதலில்  வெதுவெதுப்பான நீரில் உங்கள் நகங்களை ஊற வையுங்கள். பிறகு ஒரு காட்டன் பந்தில் ஆல்கஹாலை முக்கி அதனை நகங்களில் தேய்க்கவும். இதன் பின்னர் ஆல்கஹால் நீரில் நகங்களை ஊற வையுங்கள். கடைசியில் நகங்களை பொறுமையாக தேய்த்தால் நக பாலிஷ் அழிந்து விடும். 

4. சானிடைசர்:

கொரோனா வந்ததில் இருந்து அனைவரது வீடுகளிலும் சானிடைசர் உள்ளது. ஒரு காட்டன் பந்தில் சானிடைசரை முக்கி அதனை நகங்களில் தேய்த்து மசாஜ் செய்யவும். மெதுவாக தேய்த்து எடுத்தால் நெயில் பாலிஷ் வந்துவிடும். 

5. ஹைட்ராக்ஸி பெராக்ஸைட்:

பெரும்பாலான வீடுகளில் இந்த பொருள் இருக்கும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு ஹைட்ராக்ஸி பெராக்ஸைட் ஊற்றி இதனோடு கொஞ்சமாக நீர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் உங்கள் நகங்களை சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு நெயில் கட்டரில் உள்ள ஷார்ப் செய்யும் பகுதியை பயன்படுத்தி நக பாலிஷை தேய்த்து எடுங்கள்.

இவை அனைத்தும் இயற்கையான பொருட்கள் என்பதால் இதனை பயன்படுத்தும் போது உங்களுக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. எனவே நீங்கள்  பயப்படாமல் பயன்படுத்தலாம்.

Views: - 9

0

0