செயற்கை அழகுபடுத்தலுக்கு மாறியாதல் மருதாணியின் மகத்துவம் மறந்தவிட்டோம்!!

25 August 2020, 9:07 pm
maruthani
Quick Share

மருதாணி என்பது நம் கையை அழகுபடுத்த மட்டும் என்று நினைத்தால் நம்மை விட முட்டாள் யாருமில்லைங்க. ஏகப்பட்ட மகிமைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்டது தாங்க இந்த அற்புதமான மூலிகை. இந்த மருதாணியின் மகத்துவம் பற்றி தாங்க இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

  1. மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் இந்த மருதாணி தாவரத்திற்கு உண்டுங்க. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகிய எல்லாமே எண்ணிலா மருத்துவப் பயன் நிறைந்தவைதாங்க.
  1. மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டிருக்கும். மருதாணி இலை பித்தத்தை அதிகப்படுத்தும். இதனால இந்த இலைங்க கை, கால்ல இருக்கும் சேற்றுப் புண், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் எல்லாமே சரிசெய்யுங்க.
  1. இலை மட்டும் இல்லைங்க மருதாணி வேர் கூட உடலில் உள்ள பல நோய் நீக்கி உடலைத் தேற்றும். மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை மாதிரி செய்து படுத்து வந்தா நல்ல தூக்கம் வரதோட, தலைப் பேன்களும் குறைஞ்சிடும்.
  1. மருதோன்றி இலைய மைய அரைத்து அடை போல தட்டையா தட்டி நிழலில் காயவச்சிக்கோங்க. அதை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில போட்டு 21 நாள்கள் வெயிலில் வச்சிருந்த அப்புறம் வடிகட்டி ஒரு ஜாடில பத்திரப் படுத்தி வச்சிக்கோங்க. இந்த எண்ணெய தினசரி தலையில் தடவிகிட்டா இளநரையும் மறைஞ்சு போயிடும் கண்ணுக்கும் குளிர்ச்சி கிடைக்கும். நல்ல தூக்கமும் கிடைக்கும்.
  1. 6 தேக்கரண்டி அளவு ஃப்ரெஷான மருதாணி இலைச் சாறை வெறும் வயிற்றில் காலைல 10 நாள்கள் குடிச்சு வந்தா பெண்களுக்கு ஏற்படுற வெள்ளைப் படுதல் பிரச்சினை எல்லாம் குணமாயிடுங்க.
  1. மருதாணி இலைகளோட கொஞ்சம் பாக்கு சேர்த்து அம்மியில அரைச்சு இரவுல கை, கால் நகங்களின் மேல வைச்சு, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவிக்கோங்க. இந்த மாதிரி 15 நாள்களுக்கு ஒரு முறை செஞ்சா நகம் சொத்தையாகுறது அழுக்கோட பளபளப்பு இல்லாமல் இருக்கிறது இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துடும். அதுமட்டுமில்லாம நகம் சம்பந்தமா ஏற்படும் எந்த நோயா இருந்தாலும் வராம இருக்கும்.
  1. மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினீங்கனா கொப்புள தீக்காயம் எல்லாமே குணமாகிடும்.
  1. கொஞ்சம் மருதாணிக் கொழுந்தை தண்ணியில போட்டு ஊறவச்சிடனும்ங்க. நல்லா ஒரு 1 மணி நேரம் ஊறின அப்புறம் இந்த நீரை நல்லா கொதிக்க வைச்சு கஷாயம் செஞ்சிக்கோங்க. இந்த கஷாயத்தால வாய் கொப்பளிச்சா வாய்ப்புண் தொண்டைப்புண் மாதிரியான பிரச்சினை எல்லாம் எதுவும் இருக்காதுங்க.
  1. மருதாணி இலைகளை அரைச்சு பாதத்துல வச்சு கட்டுறது சிறந்த பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்னுன்னு சொல்றாங்க.
  1. மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவினா உடல் எரிச்சல் சரியாகும். மருதாணி இலைகளை அரைச்சு பற்றுப் போட்டுகிட்டா தலைவலி குணமாகுங்க. மருதாணி இலை மற்றும் பூ எல்லாம் குஷ்ட நோய்க்கு ஏற்ற ஒரு அருமையான மருந்தாங்க. இதை வந்து பல மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி படுத்தியிருக்காங்க.

இன்னும் நாம் தெரிஞ்சிக்காத மருத்துவ குணங்கள் எவ்வளவோ இருக்குங்க! இதெல்லாம் தெரியாம நாம நெயில் பாலிஷ், பியூட்டி பார்லர் எல்லாம் போய் நகத்துக்கு மேனிகியூர் அப்படினு என்னென்னவோ பண்ணிட்டு இருக்கோம். இந்த மாதிரி நமக்கு தெரிஞ்ச மூலிகைகளோட தெரியாத மருத்துவ குணங்கள் பற்றி தெரிச்சுக்க Updatenews360 சேனலைப் பாருங்க.

Views: - 44

0

0