முடி கொட்டுதே… கொட்டுதேன்னு கவலைபட்டு கொண்டு இருந்தால் வேலைக்கே ஆகாது… முடி வேகமாக வளர முதல்ல இத பண்ணுங்க!!!

17 November 2020, 9:34 pm
Quick Share

தலைமுடி உதிர்வு என்பது தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு பெறும் பிரச்சினை ஆகும். முடி கொட்டுவதற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு பராமரித்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அதே போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான முடி இருக்கும். அது என்ன என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு சாதாரண கூந்தல் இருக்கும். இன்னும் சிலருக்கு வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுள்ள கூந்தல் மற்றும் பலவீனமான கூந்தலை பெற்றிருப்பார்கள். இந்த நான்கு வகை கூந்தலில் உங்கள் கூந்தல் எந்த வகை என்று அறிந்த பிறகு அதற்கு ஏற்ப பராமரித்து வந்தால் முடியின் வளர்ச்சி அமோகமாக இருக்கும். 

1. சாதாரண கூந்தல்:

இந்த வகை கூந்தல் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லலாம். கூந்தல் கவனிப்பு பற்றி இவர்கள் பெரிதும் கவலைப்பட தேவையில்லை. அதற்காக அது தானாக வளரட்டும் என்று அசால்ட்டாக இருக்க கூடாது. கூந்தலில் அதிக அழுக்கு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். 

2. எண்ணெய் பசையுள்ள கூந்தல்:

சாதாரண கூந்தலுக்கு நேர்மாறாக இந்த வகை கூந்தலுக்கு அதிக பராமரிப்பு தேவை. எளிதில் மாசு மற்றும் தூசு கூந்தலில் படிந்து விடும். வெளியில் செல்லும் போது கூந்தலை விரித்து போட்டு செல்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இந்த வகை கூந்தல் இருப்பவர்கள் எலுமிச்சை, மருதாணி, சீயக்காய் கொண்ட ஷாம்பூக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எப்போதும் உங்களை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம். எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகளை அதிகம் எடுக்க வேண்டாம். தலை குளித்த பிறகு கடைசியாக ஒரு கப் தண்ணீரில் வினிகர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து முடியை அலசி வர நல்ல பலன் கிடைக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சீயக்காய், திரிபலா மற்றும் புங்கங்காய் ஆகியவை கொண்டு செய்யப்பட்ட ஷாம்பூவை பயன்படுத்தி வருவது முடிக்கு நல்லது.  

3. வறண்ட கூந்தல்:

வறண்ட கூந்தல் உடையவர்களுக்கு பிளவு முனை மற்றும் முடியின் நிறம் ஒரு பிரச்சனையாக இருக்கும். இவர்களும் கூந்தலை நன்றாக பராமரிக்க வேண்டும். அடிக்கடி எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வேண்டும். முட்டை மற்றும் நெல்லிக்காயினால் ஆன ஷாம்பூ வறண்ட கூந்தலுக்கு சிறந்தது. மேலும் ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், செம்பருத்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை கொண்டும் மசாஜ் செய்து வரலாம். தலை குளித்த பின் கருப்பு வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரால் முடியை அலசி வர முடியின் நிறம் கருமையாகும். 

4. பலவீனமான கூந்தல்:

பலவீனமான கூந்தல் உடையவர்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும். உப்பு நீரை பயன்படுத்தி வருபவர்களுக்கு இது போன்ற கூந்தல் இருக்கும். பலவீனமான கூந்தல் உடையவர்கள் வாரம் ஒருமுறை கறிவேப்பிலை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து குளிக்கலாம். அதே போல உணவிலும் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அரைக்கீரை, முளைக்கட்டிய கொண்டைக்கடலை பயிர் ஆகியவையும் அடிக்கடி எடுக்க வேண்டும். மருதாணி மற்றும் கறிவேப்பிலை போட்டு காய்ச்சிய தேங்காய் எண்ணெயை தினமும் பயன்படுத்தி வர முடி ஆரோக்கியமாக இருப்பதோடு பளபளப்பாகவும் இருக்கும். சின்ன வெங்காயத்தோடு கற்றாழை சாறு, இஞ்சி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை கலந்து ஹேர் பேக் போட்டு வர முடியின் வளர்ச்சி சூப்பராக இருக்கும்.

Views: - 40

0

0