மென்மையான அழகிய கைகளை பெற ஆசையா…??? இந்த ஈசியான முறையை ஃபாலோ பண்ணுங்க அது போதும்!!!

25 August 2020, 2:30 pm
Quick Share

தொற்றுநோய்களின் போது அதிகரித்த வீட்டு வேலைகள் மற்றும் வழக்கமான கை கழுவுதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உங்கள் கைகளின் மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களா? இல்லையென்றால், நீங்கள் அதனை செய்யும் சரியான நேரம் இது. பல முறைகளை முயற்சித்த போதிலும், உங்களால்  இன்னும் ஒரு சிறந்த தீர்வைக் கொண்டு வர முடியவில்லை என்றால் இந்த எளிய வீட்டு வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள். இது நிச்சயமாக உங்களுக்கு உடனடி தீர்வு தரும். 

இப்போது நாம் நான்கு மாதங்களுக்கும் மேலாக வீட்டில் இருப்பதால், துப்புரவு செய்தல், கழுவுதல் மற்றும் சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து வருகிறோம். இது நம் கைகளை மிகவும் பாதித்திருக்கும். உங்கள் கைகள் மென்மையாகவும்,  இளமையாகவும் தோற்றமளிக்க உதவும் ஒரு  சுலபமான செய்முறையை பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்:

2 தேக்கரண்டி – உப்பு

3 தேக்கரண்டி – ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்

½ – எலுமிச்சை சாறு

முறை:

ஒரு சிறிய கிண்ணத்தில், உப்பு, எண்ணெய் சேர்த்து கலக்கவும். பின்னர் அரை எலுமிச்சை பழச்சாறு பிழிந்து கலக்கவும்.

கலவையை உங்கள் உள்ளங்கைகளில், முன்னும் பின்னும் தடவவும்.

பிழிந்த எலுமிச்சை தோலை கைகளில் முழுவதும் தேய்க்கவும்.

இரண்டு-மூன்று நிமிடங்களுக்கு கலவையை உங்கள் கைகளில் சரியாக தேய்க்கவும். 

ஐந்து நிமிடங்கள் இதனை அப்படியே விட்டு விடலாம். பிறகு சாதாரண நீரில் கழுவவும்.

நன்மைகள்:

இதில் நாம் பயன்படுத்தி உள்ள எலுமிச்சை இறந்த சருமத்தை அகற்ற உதவுகிறது மற்றும் சருமத்தை வெளியேற்றும். எந்த கடினமான விளிம்புகளையும் மென்மையாக்க இது உதவுகிறது. இதனை பயன்படுத்திய பிறகு உங்களிடம் மென்மையான, மிருதுவான, ஒளிரும் கைகள் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. 

Views: - 29

0

0