தெளிவான அழகான சருமம் பெற நீங்கள் சேர்க்க வேண்டிய ஐந்து உணவுகள்!!!
7 April 2021, 4:51 pmஉடற்தகுதி என்று வரும்போது நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பலரும் பல ஆலோசனைகளை வழங்குவார்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முகப்பரு இல்லாத, தெளிவான மற்றும் ஒளிரும் சருமத்தை பெற பல விதமான அழகு சாதன பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும் உண்மையில் நீங்கள் சாப்பிடுவது தான் உள்ளே இருந்து உங்கள் சருமத்தை குணப்படுத்த உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான பிரகாசத்தை அளிக்கிறது.
தெளிவான மற்றும் ஒளிரும் சருமத்தை பெற உதவும் ஐந்து உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. அவகேடோ பழம்:
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அவகேடோ பழம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் பொதுவாக முகப்பருவுடன் தொடர்புடைய அழற்சியை எதிர்த்துப் போராடுகிறது.
2. ஆரஞ்சு:
வைட்டமின் C, நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். இது சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆரஞ்சு போன்ற வைட்டமின் C நிறைந்த உணவுகள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
3.தக்காளி:
இயற்கையில் அமிலத்தன்மை கொண்ட தக்காளி, வடுக்களை குணப்படுத்தவும், ஹைப்பர்கிமண்டேஷன் போக்கவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது. ஏனென்றால், அவை வைட்டமின் C, E மற்றும் K நிறைந்தவை. அவை ஆல்பா-பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகளால் நிறைந்துள்ளதால், அவை இயற்கையான அஸ்ட்ரின்ஜென்டாக (astringent) செயல்படுகின்றன மற்றும் துளை அளவைக் குறைக்கின்றன.
4. கீரை:
கீரை உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் இதில் குளோரோபில் எனப்படும் ஒரு கூறு நிறைந்துள்ளது. இந்த மூலப்பொருள் உங்கள் குடலை சுத்தப்படுத்தவும், உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
5. கொட்டைகள்:
கொட்டைகள் நல்ல கொழுப்புகளைக் கொண்டுள்ளன. இது உங்கள் சருமத்தை இறுக்கமாகவும், ஒளிரும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் செலினியம் மற்றும் வைட்டமின் E அதிகமாக உள்ளது. இது சருமத்தை அமைதிப்படுத்தவும், அசுத்தங்களை அழிக்கவும் உதவுகிறது.
0
0