குளியலுக்கு முன் எண்ணெய் மசாஜ் செய்துக்கோங்க…. ஆரோக்கியமான சருமத்தை பெறுங்க!!!

2 August 2020, 1:35 pm
Quick Share

நாம் என்ன சாப்பிடுகிறோமோ அது தான் நாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  ஆனால் சில நேரங்களில்  உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை நம் தோல் புறக்கணித்து விடுகிறது. எண்ணெயைப் பயன்படுத்துவது நம் உடலை பராமரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.  

ஆனால் நாம் அதைத் தவிர்த்து விடுகிறோம். நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் பல விதமான உணவுகளை எடுத்து கொள்வது போலவே உடலின் வெளிப்புறத்திற்கும் சம அளவு பராமரிப்பு தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.  

குளித்து முடித்தபின் உடலுக்கு எண்ணெய் வைப்பதன் சிறப்பைப் பற்றி பேசட்டு வரும் இச்சமயத்தில், இதனை தலைகீழாக மாற்றி அமைக்க வேண்டிய நேரம் இது. உங்கள் குளியலுக்கு  முன் உடலில் எண்ணெயைப் பயன்படுத்துவது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

சருமம் உடலின் மிகப்பெரிய உறுப்பு. எனவே  ஆயுர்வேதத்தின்படி, சருமத்திற்கு தினமும்  எண்ணெய் பயன்பாடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. பண்டைய காலங்களில், இந்தியர்கள் முதலில் தங்கள் உடலுக்கு எண்ணெய் தேய்த்து விட்டு பின்னர் ஏரி அல்லது கிணறுகளில் குளிக்கச் செல்வார்கள்.

நன்மைகள்:

* குளியலுக்கு முன் உடலில்  எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு தடையை உருவாக்குகிறீர்கள்.  இதனால் தண்ணீர் உங்கள் தோலில் இருந்து எண்ணெய்களை வெளியேற்றாது. வறண்ட அல்லது மெல்லிய சருமம் உள்ளவர்களுக்கு இது அவசியம்.

* குளியலுக்கு முன் உடலில்  சூடான எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். நீங்கள் குளிக்கும் போது இவை அனைத்தும் கழுவப்பட்டு விடும்.

* குளிக்கும் முன் எண்ணெயைப் பயன்படுத்துவதால் நீரானது  ஈரப்பதத்தை அடைத்துவிடுகிறது.  இதனால் ஈரப்பதம் உறிஞ்சுவது எளிதாக்குகிறது.

* சூடான எண்ணெய் மசாஜ் தசைகளை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

* எண்ணெய் மசாஜ் இல்லாமல் குளிப்பது விரைவிலே வயதான  அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

Views: - 14

0

0