ஒரே மாதத்தில் ஹீரோயின் போல ஸ்லிம்மாக மாற உதவும் கிரேப் ஃப்ரூட்!!!

13 January 2021, 8:12 pm
Quick Share

வெப்ப மண்டலத்தின் சிட்ரஸ் பழம் தான் க்ரேப் ஃப்ரூட். இது ஒரு ஹைப்ரிட் பழமாகும். இதனை திராட்சைப்பழம் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் இது அளவில் பெரியதாக இருக்கும். சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்தப்பழம் புளிப்பு, இனிப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. உடல் எடையை குறைக்க இந்த பழம் பெரிதும் உதவுகிறது. தினமும் இந்த பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் சாற்றை மூன்று டம்ளர் வரை பருகலாம். இது உடலில் உள்ள கலோரிகளை குறைக்க உதவும். நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை கிடைக்கும் இந்த பழத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம். 

◆கொழுப்பை குறைக்கிறது:

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைப்பதில் க்ரேப் ஃப்ரூட் பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால் இதனை எடுப்பதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். ஏனெனில் இது ஒரு சில மருந்துகளுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளதால் நீங்கள் எடுத்து கொள்ளும் மருந்துகளுக்கு இது ஒத்து வருமா என்பதை தெளியபடுத்தியவுடன் பழத்தை எடுப்பது நல்லது. 

◆செரிமானத்தை மேம்படுத்துகிறது:

திராட்சை பழங்களில் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்திருப்பதோடு அமிலத்தன்மையும் உள்ளது. மேலும் இதில் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. உங்களுக்கு செரிமான கோளாறு இருந்தால் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். தொடர்ந்து இதனை செய்து வரும்போது உங்களுக்கே நல்ல மாற்றம் தெரியும். 

◆உடல் எடை குறைய:

க்ரேப் ஃப்ரூட்டில் ஏகப்பட்ட என்சைம்கள் உள்ளது. இவை உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இந்த பழத்தில் சோடியம் குறைவாகவும், நீர்ச்சத்து அடக்கம் கொண்டதாகவும் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பழம் ஒரு நல்ல சாய்ஸ்.

◆தூக்கமின்மை சரியாக:

ஒரு சிலருக்கு எப்படி தான் புரண்டு புரண்டு படுத்தாலும் இரவில் தூக்கமே வராது. இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது க்ரேப் ஃப்ரூட். இரவு படுக்க போகும் முன்பு ஒரு கிளாஸ் க்ரேப் ஃப்ரூட் ஜூஸ் குடிப்பதால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். கண்டிப்பாக டிரை பண்ணி பாருங்க. 

◆புற்றுநோயை தடுக்க:

புற்றுநோயை தடுக்கும் உணவு வகைகளில் க்ரேப் ஃப்ரூட் ஒன்று. க்ரேப் ஃப்ரூட்டிற்கு சிவப்பு நிறத்தை தருவது லைக்கோபீன் என்ற என்சைம் தான். இது புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் புற்றுநோய் கட்டிகளை உண்டாக்கும் ஃப்ரு ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகிறது. குறிப்பாக பிராஸ்டேட் கேன்ஸருக்கு எதிராக போராடும் தன்மை க்ரேப் ஃப்ரூட்டிற்கு உள்ளது. 

எந்தெந்த சீசனில் என்னென்ன பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்கின்றனவோ அதனை நாம் தவறாமல் சாப்பிட வேண்டும். எனவே இந்த சீசனில் கிடைக்கும் இந்த க்ரேப் ஃப்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கூட்டி கொள்ளுங்கள். 

Views: - 5

0

0