முகத்தை பளிச்சென்று மாற்ற கொய்யா இலை ஃபேஸ் பேக்!!!

4 March 2021, 7:33 pm
Quick Share

கொய்யாப்பழம் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். அதனை சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும்.  பழத்தின் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தவிர, அதன் இலைகள் ஒருவரின் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது பலருக்கும் தெரியாது.  குறிப்பாக முகப்பரு, வடுக்கள், நிறமி மற்றும் சீரற்ற தோல் தொனி போன்ற பிரச்சினைகளால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் கொய்யா இலை உங்களுக்கு உதவும். 

பிரச்சினை கடுமையானதாக இல்லாவிட்டால், கொய்யா இலை விழுது கொண்டு  தயாரிக்கப்பட்ட எளிதான வீட்டு தீர்வுக்கு ஒருவர் செல்லலாம். இலைகளில், பழத்தைப் போலவே, பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதால் அவை உங்கள் சருமத்திற்கு ஒரு சூப்பர்ஃபுட்டாக அமைகிறது.

கொய்யா இலைகளில் “சிறந்த மருத்துவ சொத்து” இருப்பதாக ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது.

ஐசோஃப்ளேவனாய்டுகள், கல்லிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், கரோட்டினாய்டுகள் போன்ற செயலில் உள்ள பொருட்களின் காரணமாக கொய்யா இலைகளில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இது தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் சேதத்தை சரிசெய்கின்றன.

கொய்யா இலைகளை எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்:

* கொழுந்து கொய்யா இலைகள்

* ஒரு சில சொட்டு நீர்

முறை:

*கொய்யா இலைகளை எடுத்து அதனை நைசாக அரைத்து ஒரு பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். 

*கொய்யா இலைகள் கொழுந்தாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். 

எப்படி பயன்படுத்துவது?

* உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி  கழுவவும் அல்லது சருமத்தில் உள்ள  துளைகளைத் திறக்க ஐந்து நிமிடங்கள் முகத்தை  நீராவியில் காட்டலாம்.

* நாம் தயார் செய்து வைத்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் சமமாக தடவவும்.

* அது முகத்தில் முழுமையாக காய்ந்து போகும் வரை காத்திருங்கள். 

* பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குறிப்பு:

* இதனை பயன்படுத்திய பின்னர் சருமத்தில் லேசான எரிச்சல் இருப்பது  சாதாரணமானது. 

*ஆனால் உங்களுக்கு சென்சிடிவ்  தோல் இருந்தால், நீங்கள் இதனை பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்து பாருங்கள். 

*நீங்கள் இந்த கலவையில் சிறிது தயிர் கூட சேர்க்கலாம்.

*தெளிவான, ஒளிரும் தோலை பெற வாரத்தில் 2-3 முறை இதைச் செய்யுங்கள்.

Views: - 42

0

0