முடி உதிர்வு என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.
மன அழுத்தம், தூக்கமின்மை, விட்டமின் குறைபாடு, தண்ணீர் மாற்றம் எனப்பல வகையான காரணங்களால் முடி உதிர்வது ஏற்படுகிறது. தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க கறிவேப்பிலை:
*கறிவேப்பிலை, மருதாணி இலை இரண்டையும் சேர்த்து அரைத்து தலையில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் உடல் சூடு தணிந்து முடி கருமையாக வளரும்.
*முடி உதிர்வதைத் தடுக்க எண்ணெய் மசாஜ்:
இளஞ்சூடான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முடி உதிர்வது குறையும். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
*முடி உதிர்வதைத் தடுக்க கற்றாழை:
இயற்கையாக கிடைக்கக்கூடிய கற்றாழையை எடுத்து அதில் நடுவில் உள்ள சதை பகுதியை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து முடி பளபளப்பாக இருக்கும்.
*முடி உதிர்வதை தடுக்க தயிர்:
வாரம் ஒரு முறை குளிப்பதற்கு முன் தயிரை அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளித்தால். கேசத்துக்கு ஊட்டச்சத்து கிடைத்தது முடி உதிர்வது குறையும்.
*முடி உதிர்வதை தடுக்க எண்ணெய் குளியல்:
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து இளஞ்சூடாக தலையில் தேய்த்து மசாஜ் செய்து பின்பு ஒரு மணிநேரம் கழித்து குளித்தால். நாளடைவில் தலைமுடி உதிர்வது குறையும்.
*முடி உதிர்வதை தடுக்க சின்ன வெங்காயம்:
சிலருக்கு பொடுகு தொந்தரவு இருக்கும். அதற்கு சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி முடி உதிர்வது குறையும்.
*முடி உதிர்வதை தடுக்கும் கொத்தமல்லி இலை:
அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருள் கொத்தமல்லி தழை. கொத்தமல்லி இலையில் உள்ள சாறினை எடுத்து கொண்டு தலையில் தடவி குளித்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வது குறையும்.
*முடி உதிர்வதை தடுக்கும் வெந்தயம்:
தேவைக்கேற்ப வெந்தயத்த எடுத்து தண்ணீரில் ஊற வைத்து அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று. முடி நன்கு வளர ஆரம்பிக்கும்.
*முடி உதிர்வதை தடுக்கும் சோம்பு:
வாரம் இரண்டு முறை சோம்பை எடுத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வது குறையும்.
*முடி உதிர்வதை தடுக்கும் சாதம் வடித்த தண்ணீர்:
நாம் வீண் என நினைத்து கீழே ஊற்றும் சாதம் வடித்த தண்ணீரில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. சாதம் வடிக்கும் போது கிடைக்கும் நீருடன், சீகைக்காய் கலந்து தலைக்குத் தடவி வாரம் இரு முறை குளிக்கலாம். இவ்வாறு செய்யும்போது, தலைமுடி அடர்த்தியாக காணப்படுவது மட்டும் அல்லாமல் பளபளப்பாகவும் வளரும்.
இப்படி வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து உங்கள் முடியை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.