இளநரையை நிரந்தரமாக போக்கும் ஹேர் ஆயில் வீட்டிலே செய்யலாம்!!!

Author: Hemalatha Ramkumar
9 June 2023, 1:10 pm
Quick Share

நம் முடியின் வேர்ப்பகுதியில் உள்ள மெலானோசைட்ஸ் செல்கள் உள்ளன. இவை “மெலனின்’ என்ற நிறமியை உற்பத்தி செய்கின்றன. நம் தலைமுடியின் நிறத்திற்கு இவை இந்த செல்களே காரணமாக அமைகின்றன. மெலானின் அளவின்படி நம் தலைமுடியின் நிறமானது உள்ளது. பொதுவாக வயது முதிர்ச்சியின் போது இயற்கையாகவே இந்த மெலனின் நிறமியின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் வயதானவர்களுக்கு தலைமுடி நரைத்து வெண்மையாக மாறிவிடுகிறது.

ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடியானது நரைத்து விடுகிறது. இதனை இளநரை என்கிறோம். இளநரை ஏற்படுவதற்கு உடல் ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன.

இளநரைக்கான காரணங்கள்:
சிலருக்கு தமது முன்னோர்களின் இளநரை காரணமாக பாரம்பரியமாகவே இளநரை வரலாம்.

தலையில் பொடுகு அதிகமாக இருந்தால், அவை முடியின் வேர்கால்களை அடைத்துவிடும். இதனால் மெலனின் உற்பத்தி குறைந்து நரைமுடி அதிகரிக்கும்.
சுற்றுச்சூழல் மாசு,அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இளநரை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இளநரை வரலாம். அதாவது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது. தரமற்ற அதிகப்படியான வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட ஷாம்பு மற்றும் சீயக்காய் பயன்படுத்துவது.

இளநரை பிரச்சனையானது வயது முதிர்ந்த தோற்றத்தை காட்டுகிறது என்பதால் பலரும் இதற்கு தீர்வு காண விரும்புகின்றனர். இளநரையை போக்க ஒரு சில வழிகளை இங்கே காண்போம்.

மரபு வழியாக வரும் இளநரையை தடுக்க இயலாது. ஆனால் அதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கக் கூடிய எண்ணெயை தலை முடியில் தடவுவதன் மூலம் இதனை போக்கலாம்.

மருதாணி, கறிவேப்பிலை, வெந்தயம், கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், செம்பருத்தி பூ இவற்றை நன்கு காய வைத்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 100 மில்லி அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இந்த எண்ணெயை தினமும் தலைமுடியின் வேர்களில் படும்படி தலையில் தேய்த்து வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது முடியின் நிறம் கருமையாக மாறுகிறது.

நாம் உண்ணும் உணவுகளில் இரும்புச் சத்து, புரோட்டீன் அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தது வாரத்தில் இருமுறையாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலை முடியை சுத்தம் செய்ய சிகைக்காய், அரப்பு, பாசிப்பயறு மாவு போன்ற இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பீட்ரூட், ஆப்பிள், பேரிச்சை பழம், பீர்க்கங்காய், பாகற்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெந்தயம், தேன், பால், தயிர் போன்ற உணவுப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை உங்களுடைய தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1756

0

0