சங்கடத்தை ஏற்படுத்தும் மஞ்சள் கறையை பற்களில் இருந்து நீக்கும் சமையலறை பொருட்கள்!!!

Author: Hemalatha Ramkumar
27 May 2022, 6:45 pm
Quick Share

ஒருவருடைய முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டுவதே சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது பற்களில் மஞ்சள் கறை இருந்தால். உங்களை பார்ப்பவரின் மனதில் கெட்ட எண்ணம் உருவாகும். வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உள்ளது. ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பல காரணங்களும் உண்டு. அவை என்ன? அவற்றை எப்படி வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்து எப்படி சரிசெய்து என்று பார்ப்போம்.

பற்களில் கறை ஏற்படுவதற்கான காரணங்கள்:

வெற்றிலை போடுவது, குட்கா பான்மசாலா பயன்படுத்திவது புகைப்பழக்கம், டீ, காபி அருந்துவது , குளிர்ந்த பானங்கள் அருந்துவது, இரும்புச்சத்து மாத்திரை மற்றும் டானிக்குகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவது போன்ற பல காரணங்களால் பற்களில் கறை தன்மை ஏற்படும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவிற்கு பற்களில் உள்ள கறைகளைப் போக்கக்கூடிய சக்தி உள்ளது. அதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, ஈரமான டூத்பிரஷ் பயன்படுத்தி, பற்களைத் தேய்க்க வேண்டும். இதுப்போல் மாதம் 2 முறையாவது செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நாளடைவில் மஞ்சள் கறை நீக்கி விடும்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தின் தோலை எடுத்துக் கொள்ளவும் பின்பு அந்தத் தோலை பற்களில் எல்லா இடங்களிலும் தேய்க்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதுபோல் தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கி விடும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்யை வாயில் விட்டு, 15 நிமிடம் வாயினுள் கொப்பளிக்க வேண்டும். பின் அந்த எண்ணெய்யை துப்பி, கை விரலால் பற்களைத் தேய்த்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கி பற்களில் உள்ள மஞ்சள் கறை குறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சை:

எலுமிச்சை சாறில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம். அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

ஆப்பிள்:

ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு மட்டுமின்றி, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளும் நீங்கும். ஏனெனில் இதில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது.

உப்பு:

பற்களைத் துலக்கும் போது, சிறிதளவு உப்பை டூத் பிரஷ்ஷில் வைத்து, பற்களைத் துலக்க வேண்டும். பின் குளிர்ச்சியான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி வாரத்தில் 2 முறையாவது செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அடுப்பில் உள்ள சாம்பல்:

தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்துக்கூடிய டூத் பேஸ்ட்டில் சிறிது அடுப்பு சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையாகி மஞ்சள் கறை மறையும்.

Views: - 451

0

0