ஸ்ட்ரெய்ட்டன் செய்ததை போல உங்கள் மாற இரண்டே பொருட்களுடன் ஹோம்மேட் ஹேர் கண்டிஷனர்!!!

13 January 2021, 9:49 pm
Quick Share

தலை குளிக்கும்போது ஷாம்பூ பயன்படுத்தும் அனைவரும் அதன் பின்பு கண்டிஷனர் பயன்படுத்துவதில்லை. ஆனால் உண்மையில், கண்டிஷனர் பயன்படுத்துவதன் நன்மைகளை அறிந்தால் நிச்சயமாக அதனை தவறாமல் செய்வீர்கள். பட்டுப்போன்ற கூந்தல் வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் கண்டிப்பாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரின் நன்மைகளை அறிந்து அதனை பயன்படுத்தும் சிலரும் கடைகளிலே வாங்குகிறார்கள். வறண்டு போன கூந்தல் உள்ளவர்கள் அதற்கு தகுந்தாற்போல் கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியம். கண்டிஷனர் வாங்கினால் செலவு அதிகமாகுமோ என்ற கவலை உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு உதவ தான் இந்த பதிவு. 

கண்டிஷனர் ஏன் பயன்படுத்த வேண்டும்?

வறண்டு போன பரட்டையாக உள்ள கூந்தலை யாரும் விரும்புவதில்லை. அது மட்டும் இல்லாமல் வறண்ட கூந்தல் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது. இத்தகைய பிரச்சினை தரும் வறட்சியை போக்க கண்டிஷனர் பெரிதும் உதவும். கண்டிஷனர் பயன்படுத்துவதினால் கூந்தல் ஈரப்பதத்தோடு இருக்கும். நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு அதிக கண்டிஷனர் செலவாகும். இது போன்றவர்கள் வீட்டிலே கண்டிஷனர் செய்து வைத்து கொள்வது செலவை குறைக்கும்.

கண்டிஷனர் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:-

*ஆப்பிள் சைடர் வினிகர்- 2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி

*தண்ணீர்- 1 கப்

செய்முறை:-

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் ஊற்றி ஒரு ஒட்டு ஒட்டிக் கொள்ளுங்கள். பிறகு இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்து கொள்ளவும். இது ஒரு மாதத்திற்கு போதுமானது. இதனை இயற்கையான முறையில் நாம் தயாரித்து இருப்பதால் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. 

கண்டிஷனர் பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் எப்போதெல்லாம் தலை குளிக்கிறீர்களோ அப்போதெல்லாம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஷாம்பூ போட்டு அலசிய பின் ஈரமான உங்கள் கூந்தலில் ஸ்ப்ரே பாட்டில் மூலம் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். பிறகு வழக்கம் போல கூந்தலை அலசிக் கொள்ளலாம். பிறகு கூந்தலை உலர வைக்கவும். தலையை அழுத்தி தேய்க்க கூடாது. 

கண்டிஷனர் பயன்படுத்துவதன் நன்மைகள்:

*தொடர்ந்து கண்டிஷனர் பயன்படுத்தி வரும்போது கூந்தல் வறட்சி நீங்கும். 

*சிக்கு இல்லாத கூந்தல் கிடைக்கும். 

*அதிகப்படியான சுருள் அல்லது பரட்டை போன்ற கூந்தலை சமநிலைப்படுத்த உதவுகிறது.

*ஆப்பிள் சைடர் வினிகரில் காணப்படும் அசிடிக் அமிலம் கூந்தலை பளபளப்பாகவும், பிரகாசமாகவும் வைத்து கொள்கிறது. 

*மேலும் கூந்தலில் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது. 

*உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக வளர தேவையான ஊட்டச்சத்துத்களான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ளது. 

*எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சத்து கூந்தலுக்கு மிகவும் அவசியம். 

இத்தகைய நன்மைகள் அடங்கிய கண்டிஷனரை கண்டிப்பாக நீங்களும் டிரை பண்ணி பார்க்க வேண்டும்.

Views: - 13

0

0