உங்களுக்கு ஏற்ற, கவர்ச்சிகரமான காண்டாக்ட் லென்ஸை தேர்வு செய்வது எப்படி???

21 January 2021, 7:03 pm
Quick Share

பொதுவாக கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிவார்கள். ஆனால் தங்கள் அழகை மெருகேற்றி கொள்ள பலர் கலர் கலராக காண்டாக்ட் லென்ஸ் அணிவது தற்போதைய டிரெண்ட். காண்டாக்ட் லென்ஸ் பல்வேறு நிறங்களில் கிடைப்பதால் அதை அணிவது ஒருவரின் தோற்றத்தையே மாற்றி விடுகிறது. 

இவ்வாறு காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது அதனை தேர்வு செய்ய ஒரு சில யுக்திகள் உள்ளன. ஒருவரின் தோற்றம், தலைமுடியின் நிறம் மற்றும் சருமத்திற்கு ஏற்ப காண்டாக்ட் லென்ஸை தேர்வு செய்ய வேண்டும். முகத்திற்கு ஏற்றவாறு கண்ணாடி ஃபிரேமை எப்படி தேர்வு செய்கிறோமோ அது போன்று தான் இதுவும். அதற்கான சில உதவிக் குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். 

சருமம்:

காண்டாக்ட் லென்ஸ் தேர்வு செய்யும் முன்பாக முதலில் உங்கள் சருமம் என்ன நிறம் என்பதை அறிந்து கொள்ளவும். பொதுவாக சருமம் என்பது வெள்ளை நிறம், மாநிறம் மற்றும் கருமை நிறம் என மூவகைப்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு காண்டாக்ட் லென்ஸை சூஸ் பண்ணுங்க. அப்போது தான் அழகாக இருக்கும். 

1. வெள்ளை நிற சருமம்:

வெள்ளை நிற சருமம் பெற்றவர்கள் எந்த நிற காண்டாக்ட் லென்ஸ் வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். குறிப்பாக க்ரே ப்ளூ மற்றும் பழுப்பு நிற லென்ஸ் அணிவது உங்களுக்கு ஸ்டைலான லுக்கையும், அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய கவர்ச்சிகரமான  கண்களையும் கொடுக்கும். தனித்துவமான அழகை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் டர்க்கைஸ், அக்வா மற்றும் ஊதா நிற காண்டாக்ட் லென்ஸை தேர்ந்தெடுக்கலாம். இது போன்ற லென்ஸ்களை  மேக்கப்போடு அணியும் போது டக்கராக இருக்கும்.

2. மாநிற சருமம்:

மாநிற சருமம் கொண்டவர்கள் பிரைட்டான கலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஹனி, டார்க் ப்ளூ, க்ரே போன்ற நிறங்கள் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். ஒரு வேலை இயற்கையாகவே உங்கள் கண்கள் நிறமாக இருக்கும் பட்சத்தில் அதே நிற லென்ஸ் அணியும் போது கண்கள் இன்னும் டார்க்காகவும், கவர்ச்சியாகவும் தெரியும்.

3. கருமை நிற சருமம்:

சற்று கருமை நிறம் மற்றும் ஆழமான கருப்பு நிற சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்ற சில நிறங்கள் உள்ளன. ஹேசல், பிரவுன் அல்லது டூ- டன் வைலட் நிற காண்டாக்ட் லென்ஸ் தான் உங்களுக்கு ஏற்றது. இது இயற்கையாகவே உங்களை கவர்ச்சிகரமாக காட்டும். அனைவரும் உங்களை திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைத்தால் க்ரே, லைட் கிரீன் அல்லது பழுப்பு நிறங்களை தேர்வு செய்யலாம். அக்வா, இளஞ்சிவப்பு போன்ற டார்க் கலர்கள் உங்களுக்கு செட் ஆகாது. எனவே அதனை ஒரு போதும் அணிய வேண்டாம்.