சுண்டுனா இரத்தம் வரா போல இருக்க உதடுகள் வேண்டுமா… உங்களுக்கான சீக்ரெட் லிப் மாஸ்க்!!!

Author: Hemalatha Ramkumar
25 March 2023, 7:35 pm
Quick Share

உலர்ந்து, வறண்டு காணப்படும் உதடுகளை யார் தான் விரும்புவார்கள்? உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததாலும், நீரிழப்பு காரணமாகவும், சரியான கவனிப்பு இல்லாததாலும், அவை வறண்டு போகலாம். மென்மையான, மிருதுவான மற்றும் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அறிகுறியாகும். அழகான, செக்க சிவந்த உதடுகளுக்கு வீட்டிலேயே DIY லிப் மாஸ்க்குகள் எப்படி செய்வது என பார்க்கலாம்.

◆1 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து 1 டீஸ்பூன் வாஸ்லைனுடன் நன்கு கலக்கவும். இதனுடன் 2 டீஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்க்கவும். இப்போது, தேங்காய் எண்ணெய் சில துளிகள் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். இது ஒரு ஸ்க்ரப்-கம்-மாஸ்க் ஆகும். இதை நீங்கள் உதடுகளை மென்மையாக்கவும், வறண்ட சருமத்தை அகற்றவும் பயன்படுத்தலாம்.

◆ஒரு டீஸ்பூன் கிளிசரின் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும். மிக மென்மையான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளுக்கு இதை வாரத்திற்கு 2-3 முறை உங்கள் உதடுகளில் தடவவும்.

◆ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து இந்த லிப் மாஸ்க்கை தயாரிக்கலாம். தேன் உங்கள் உதடுகளை குணப்படுத்தும் மற்றும் மென்மையாக்கும், அதே நேரத்தில் எலுமிச்சை சாறு அதிகப்படியான நிறமிகளை அகற்றும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 79

0

0