உண்மையான நண்பர்கள் மற்றும் போலி நண்பர்களை எப்படி கண்டுபிடிப்பது…???

Author: Udhayakumar Raman
12 March 2021, 10:36 pm
Quick Share

உண்மையான நண்பர்கள் மிகவும் அரிதானவர்கள். அவர்கள் உங்களுக்காக எப்போதும் உங்களுடன்  இருப்பார்கள். உங்களை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டார்கள். அவர்கள் உங்கள் உலகை ஒரு சிறந்த இடமாகவும், வாழ்க்கையை  மதிப்புக்குரியதாகவும் ஆக்குகிறார்கள்! அவர்கள் உங்கள் வழிகாட்டி, உங்கள் நம்பகமான மக்கள் என கூறலாம்.

ஆனால் சில நேரங்களில், உங்களைப் பயன்படுத்துகிற மற்றும் உங்கள் நேரத்தை முதலீடு செய்யத் தகுதியற்ற நபர்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அவர்கள் உங்கள் நண்பராக நடித்து, அவர்களுக்கு தேவையான காரியத்தை சாதித்து கொள்வார்கள்.  உண்மையான நண்பர்களுக்கும் போலி நண்பர்களுக்கும் உள்ள ஐந்து வித்தியாசங்களை இப்போது பார்க்கலாம்.

1. உண்மையான நண்பர்கள் உங்களுக்கான நேரத்தை கண்டிப்பாக கொடுப்பார்கள். தாம் எப்போதும் பிஸியாக இருப்பதாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் பிஸியான நாளிலிம் கூட  உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவார்கள்.  உங்களுக்குத் தேவைப்படும்போது அவர்கள் உங்களுக்காக இருப்பார்கள். அதேசமயம் போலி நண்பர்கள் எப்போதுமே சாக்குப்போக்கு கூறுவார்கள். உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது உங்களைத் தனியாக விட்டுவிடுவார்கள்.

2. உண்மையான நண்பர்கள் உங்களை மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் உணரவைப்பார்கள். மோசமான காலங்களில் அவர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள், உங்கள் சாதனைகளை கொண்டாடுவார்கள். போலி நண்பர்கள் உங்களை தனியாக உணர வைப்பார்கள். அவர்களுக்கு நீங்கள்  தேவைப்படும்போது மட்டுமே அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

3. நீங்கள் வெற்றியை அடையும்போதெல்லாம், உண்மையான நண்பர்கள் அதனை நினைத்து  மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் சாதனையை நினைத்து  பெருமைப்படுவார்கள். போலி நண்பர்கள், மறுபுறம், அதைப் பற்றி பொறாமைப்படுவார்கள்.

4. உண்மையான நண்பர்கள் உங்கள் குறைபாடுகளையும் தவறுகளையும்  ஏற்றுக்கொள்வார்கள். உங்களை நேசிப்பார்கள். அதேசமயம் போலி நண்பர்கள் உங்கள் குறைபாடுகளை விமர்சிப்பார்கள். உங்களை மாற்ற முயற்சிப்பார்கள்.

5. உண்மையான நண்பர்கள் உங்கள் உணர்வுகளைப் பற்றி அறிய ஆர்வமாக இருப்பார்கள். மேலும் உங்களுக்கு நேரத்தையும் கவனத்தையும் தருவார்கள். மறுபுறம், போலி நண்பர்கள் உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தங்களைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

Views: - 162

2

0