கரும்புள்ளிகளை மறையச் செய்யும் பேக்கிங் சோடா ஃபேஸ் பேக்!!!

Author: Hemalatha Ramkumar
23 March 2023, 6:34 pm
Quick Share

பேக்கிங் சோடா பல்வேறு DIY ரெசிபிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இது சருமத்தை வெண்மையாக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பேக்கிங் சோடா நேரடியாக சருமத்தை வெண்மையாக்கும் விளைவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், சருமத்தை பளபளப்பாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேறு பல விஷயங்களைச் செய்கிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுகிறது, துளைகளை அடைக்கிறது, பாக்டீரியா தொற்றுகளை விலக்குகிறது, கறைகளை நீக்குகிறது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து சருமத்திற்கு வெண்மையாக்கும் விளைவை அளிக்கிறது. இந்த பதிவில், சருமத்தை வெண்மையாக்குவதற்கு உதவும் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி சில DIY குறிப்புகளைப் பார்க்கலாம்.

பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டர்
சீரற்ற தோல் தொனிக்கு ஏற்ற பேக் இது. இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் ஒரு பங்கு ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாக தேய்த்து 5-10 நிமிடம் உலரும் வரை விடவும். இப்போது, அதை வெதுவெதுப்பான நீரைத் தொடர்ந்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம். இது சீரற்ற தோல் தொனிக்கு உதவுவதோடு, கறை இல்லாத, தெளிவான சருமத்தை அளிக்கிறது.

பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்
இவை சருமத்தை பிரகாசமாக்க உதவுகின்றன. இரண்டு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை மூன்று டேபிள் ஸ்பூன் வினிகருடன் கலக்கவும். உங்களுக்கு சென்சிடிவ் சருமம் இருந்தால் வினிகரை தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்த பின்னர் பயன்படுத்தவும். இதை முகத்தின் கருமையான பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவும். காய்ந்ததும் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த செய்முறையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தவும். இது அனைத்து இறந்த சரும செல்களையும் நீக்கி, சருமத்தின் pH ஐ பராமரிக்கும். இந்த கலவையில் சில துளிகள் எலுமிச்சை சாற்றையும் சேர்க்கலாம். ஆனால் இது சருமத்தை வறண்டு போகச் செய்வதால், ஃபேஸ் பேக் போட்ட பின் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம்.

பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய்
இந்த கலவை சருமத்தை மென்மையாக்குகிறது. இந்த செய்முறை வறண்ட சருமத்தில் கூட வேலை செய்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதனுடன் ¼ டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 3-4 துளி எலுமிச்சை சாறு கலக்கவும். உங்களுக்கு வெடிப்பு ஏற்படக்கூடிய சருமம் இருந்தால், அதற்கு சில துளிகள் தேயிலை மர எண்ணெயையும் பயன்படுத்தலாம். தோல் முழுவதும் மசாஜ் செய்து, 5-10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது நிறமிகளை நீக்கி, துளைகளை இறுக்கமாக்கி, சருமத்தை உறுதியாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 450

0

0