அழகை மெருகேற்ற வீட்டில் காபி ஃபேஸ் பேக் செய்வது எப்படி???

18 January 2021, 8:00 am
Quick Share

நம்மில் பலர் நமது நாளை சூடான காபியுடன் தான்   தொடங்குவோம். ஆனால் காபி உங்கள் சருமத்திற்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  உங்கள் சருமத்திற்கு ஒரு பிரகாசத்தை அளிக்கவும், முகப்பருவில் இருந்து விடுபடவும் காபி ஃபேஸ் பேக் உதவுகிறது. காபி தூள் உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒவ்வொரு வகையான  சரும பிரச்சினைகளுக்கும் காபி ஃபேஸ் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க… 

1. தோல் வெண்மைக்கு காபி ஃபேஸ் பேக்: 

இந்த அரிசி மாவு மற்றும் காபி ஃபேஸ் மாஸ்க் உங்கள் தோல் தொனியை ஒளிர உதவி புரிகிறது.  அரிசி மாவின் தோல் ஒளிரும் பண்புகள் முகப்பரு வடுக்களின் தீவிரத்தை குறைக்கின்றன. அதே நேரத்தில், காபி தோல் அசுத்தங்களை நீக்கி இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது. 

தேவையான பொருட்கள்: 

ஒரு டீஸ்பூன் அரிசி மாவு. இன்ஸ்டன்ட் காபி தூள் ஒரு டீஸ்பூன்

வெதுவெதுப்பான நீர். 

தயாரிப்பு: 

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து காபி பவுடர் மற்றும் அரிசி மாவை கலக்கவும். தேவையான அளவு வெதுவெதுப்பான  தண்ணீரைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் பேஸ்ட் செய்யுங்கள். 

பயன்பாட்டு முறை: 

பேஸ்டை உங்கள் முகம் முழுவதும் சமமாக தடவவும். இது 15 நிமிடங்கள் இருக்கட்டும். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

2. பிக்மென்டேஷனுக்கு காபி ஃபேஸ் பேக்: 

காபியில் உள்ள கஃபைன் கறைகள், கருமையான புள்ளிகள், சூரிய புள்ளிகள் ஆகியவற்றிற்கு எதிராக போராடுகிறது. அதேசமயம் கற்றாழை உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்திருக்கிறது.  குறிப்பிடத்தக்க முடிவுகளுக்கு முடிந்தவரை அடிக்கடி காபி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்த முயற்சிக்கவும். 

தேவையான பொருட்கள்: காபி தூள் இரண்டு டீஸ்பூன்

கற்றாழை ஜெல் இரண்டு டீஸ்பூன்

தயாரிப்பு: 

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து காபி தூள் மற்றும் கற்றாழை ஜெல்லை  சேர்க்கவும். கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும். 

பயன்பாட்டு முறை: 

தயாரித்த பேஸ்டை முகத்தில் தடவி வட்டமாக மசாஜ் செய்யுங்கள். இது காய்ந்து போகும் வரை இருக்கட்டும். பிறகு உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  

3. பருக்களுக்கான காபி ஃபேஸ் பேக்: 

உங்களுக்கு அடிக்கடி பருக்கள் வருகிறது   என்றால், காபி மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். காபி ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் மற்றும் பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை சுத்தம் செய்வதன் மூலம் அவற்றை அகற்ற உதவுகிறது. கடலை மாவில் துத்தநாகம் உள்ளது. இது பருக்களை திறம்பட குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை மற்றும் தேன் இயற்கையான ப்ளீச்சிங் பொருட்களாக  செயல்படுவதன் மூலம் உங்கள் தோல் அமைப்பை பிரகாசமாக்குகின்றன. 

தேவையான பொருட்கள்: இரண்டு டீஸ்பூன் காபி தூள்

ஒரு டீஸ்பூன் கடலை மாவு 1 டீஸ்பூன் தேன்

தயிர் ஒரு டீஸ்பூன்

1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

தயாரிப்பு: 

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். கட்டிகள் எதுவும் இல்லாமல்  நன்றாக கலக்கவும். 
பயன்பாட்டு முறை: கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் சமமாக தடவவும். இது சுமார் 20 நிமிடங்கள் இருக்கட்டும். உங்கள் முகத்தை கழுவ  வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.

Views: - 19

0

0