வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு ஃபேஸ் மிஸ்ட் செய்வது எப்படி???

Author: Hemalatha Ramkumar
24 March 2023, 3:29 pm
Quick Share

இன்று நாம் கிரீன் டீ வைத்து DIY ஃபேஷியல் மிஸ்ட் எப்படி செய்வது என்பதை காணலாம். கடுமையான வெயிலில் இருந்து நீங்கள் வீட்டிற்கு வரும்போது உங்கள் சருமத்தை ஆற்றுவதற்கு இந்த ஃபேஸ் மிஸ்ட் உதவியாக இருக்கும். இதனை எளிதாக செய்து விடலாம். சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

*கிரீன் டீயை தயார் செய்து கொள்ளவும்.

*பின்னர் தேநீரை ஆற விடவும்.

*பிறகு 5 சொட்டு எலுமிச்சை மற்றும் தேயிலை மர எண்ணெய் சேர்க்கவும்.

*அவ்வளவு தான்!
ஃபேஸ் மிஸ்ட் தயார். இதனை குளிர்சாதன பெட்டியில் ஸ்டோர் செய்து வைக்கலாம். எனினும், பயன்படுத்துவதற்கு 15-20 நிமிடங்கள் முன் வெளியே வைத்து பயன்படுத்தவும்.

*முதலில் முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். ஏனெனில், முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்குகள் அனைத்தும் சரும பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

*குளிர்சாதனப்பெட்டியில் இருந்து ஃபேஸ் மிஸ்டை வெளியே எடுத்து 5 செமீ தூரத்தில் இருந்து உங்கள் முகம் முழுவதும் தெளிக்கவும்.

*இது 15-20 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கட்டும்.

*பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 239

0

0