உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும் அதே நேரத்தில் அதற்கு நிறத்தையும் சேர்ப்பதற்கு லிப் பாம் ஒரு சிறந்த வழி. லிப்ஸ்டிக் பயன்படுத்த பிடிக்காதவர்கள் நல்ல, கெமிக்கல் இல்லாத லிப் பாமை தாராளமாக பயன்படுத்தலாம். இது மென்மையான மற்றும் ஈரமான உதடுகளை பெறுவதற்கு உதவுகிறது. நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் லிப் பாம் தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
லிப் பாம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
ஒரு டேபிள் ஸ்பூன் ஆர்கானிக் பீஸ் வாக்ஸ்
ஒரு டேபிள் ஸ்பூன் கோக்கோ பட்டர்
1/2 டேபிள்ஸ்பூன் ஷியா பட்டர்
1/4 டேபிள் ஸ்பூன் தேன்
3-4 துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய்
ஒரு டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்
1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்
1/2 டேபிள் ஸ்பூன் அவகாடோ எண்ணெய்
லிப் பாம் செய்வது எப்படி?
*ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதனை 2 முதல் 3 இன்ச் அளவு தண்ணீரால் நிரப்பவும்.
*இதனை அடுப்பில் வைத்து அதன் மீது ஒரு சிறிய கண்ணாடி ஜார் அல்லது பாத்திரத்தை வைத்து பீஸ் வாக்ஸ் சேர்க்கவும்.
*இது டபுள் பாய்லர் முறை என்று அழைக்கப்படுகிறது.
*பீஸ் வாக்ஸ் உருகும் வரை ஒரு மர குச்சியை வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
*பின்னர் அதில் கோக்கோ பட்டர், ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய், அவகாடோ எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும்.
*தொடர்ந்து அனைத்து பொருட்களும் உருகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள்.
*இப்போது அடுப்பை அணைத்து விட்டு அதில் உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெயை சேர்க்கவும்.
*நாம் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஒரு சிறிய கிளாஸ் ஜாரில் சேர்க்கவும்.
*இது அறை வெப்பநிலையில் குளிர்ந்து கெட்டியாகி விடும். இதனை நீங்கள் உடனடியாக பயன்படுத்தலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து 2 வாரங்கள் கழித்து பயன்படுத்துவது அதன் ஃப்ளேவர்கள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும்.
*இந்த லிப் பாமை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து 2 வருடங்கள் வரை உபயோகிக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.