வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நெயில் பாலிஷ் ரிமூவர்!!!

Author: Hemalatha Ramkumar
21 September 2024, 10:50 am
Nail Polish - Update News
Quick Share

உங்களுடைய நகங்களில் இருந்து பழைய நெயில் பாலிஷை அகற்றுவதற்கான விரைவான மற்றும் மிகவும் திறமை வாய்ந்த வழி நெயில் பாலிஷ் ரிமூவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. எனினும் அதில் உள்ள அசிடோன் நகங்களை வறண்டு போக செய்து, அதில் விரிசல்களை ஏற்படுத்தலாம். எனவே உங்களுடைய நெயில் பாலிஷை அகற்றுவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அசிட்டோன் இல்லாத நெயில் பாலிஷ் ரிமூவர் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். எனினும் இந்த செயல்முறையை விரைவுப்படுத்துவதற்கு நீங்கள் கைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

நெயில் பாலிஷை அகற்றுவதற்கு அசிடோன் இல்லாத வழிகள்

டூத் பேஸ்ட் மற்றும் பேக்கிங் சோடா 

கோல்கேட் போன்ற டூத் பேஸ்ட்டில் அசிடேட் உள்ளது. இது நெயில் பாலிஷ் ரிமூவர்களிலும் காணப்படுகிறது. அதனால் அசிடோன் இல்லாத நெயில் பாலிஷ் ரிமூவராக நாம் டூத் பேஸ்ட்டை பயன்படுத்தலாம். இதனை பேக்கிங் சோடா அல்லது சோடியம் கார்பனேட்டுடன் சேர்ந்து பயன்படுத்தும் பொழுது அது ஒரு சிறந்த நெயில் பாலிஷ் ரிமூவர் ஆக செயல்படுகிறது. இதற்கு உங்களுடைய நகங்களில் முதலில் டூத் பேஸ்ட்டை தடவுங்கள். அதன் மீது பேக்கிங் சோடாவை தூவவும். பின்னர் உங்கள் விரல்களைக் கொண்டு அதனை நன்றாக தேய்த்து ஒரு காட்டன் பந்தை பயன்படுத்தி அவற்றை துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்தால் உங்களுடைய நகங்களில் உள்ள நெயில் பாலிஷ் அகற்றப்படும். 

Nail Polish - Update News

சாய் அடிப்படையிலான ரிமூவர்கள் 

சாய் அடிப்படையிலான ரிமூவர்கள் விலை உயர்ந்ததாகவும் அசிடோன் ப்ராடக்டுகளை விட கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் இது உங்களுடைய நகங்களில் மென்மையாக செயல்படும். இதற்கு ஒரு ஈரமான காட்டன் பந்து ஒன்றை ரிமூவரில் முக்கி உங்களுடைய நகங்களில் தேய்க்கவும். 45 வினாடிகள் காத்திருந்து நகங்களை சுத்தம் செய்தால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். 

வினிகர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் அல்லது எலுமிச்சை 

வினிகர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் அல்லது எலுமிச்சையின் அமிலத்தன்மை நகங்களில் உள்ள நெயில் பாலிஷை எளிதாக அகற்றி விடும். வினிகர் மற்றும் ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் சாற்றை சம அளவு எடுத்து உங்கள் நகங்களில் தடவவும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அந்த நெயில் பாலிஷ் மென்மையாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும். இந்த சமயத்தில் அதனை நீங்கள் ஒரு காட்டன் பந்தை பயன்படுத்தி நீக்கிவிடலாம். 

ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அடிப்படையிலான ப்ராடக்டுகள் 

ஆல்கஹால் என்பது ஒரு கரைப்பான். அதாவது இது பொருட்களை உடைப்பதற்கு பயன்படுகிறது. அந்த வகையில் நாம் நெயில் பாலிஷை அகற்றுவதற்கு ஆல்கஹாலை பயன்படுத்த போகிறோம். இதற்கு நீங்கள் ஆல்கஹால் அல்லது ஐசோ ப்ரோப்பைல் பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் அதிகபட்ச ஆல்கஹால் அளவு உள்ளது. அது தவிர சானிடைசர், ஹேர் ஸ்பிரே மற்றும் டியோடரெண்ட் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் ஓட்கா, கின் போன்ற மதுபானங்களையும் நீங்கள் நெயில் பாலிஷை அகற்ற உபயோகித்து பார்க்கலாம். இதற்கு உங்களுடைய விரல்களை இந்த கரைப்பானில் முக்கி ஒரு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். நெயில் பாலிஷ் மென்மையானதும் காட்டன் பந்தை பயன்படுத்தி அவற்றை அகற்றுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • virat kohli தம்பி கிட்ட வாப்பா… விராட் கோலியை கை பிடித்து இழுத்து அலப்பறை செய்த Aunty – தீயாய் பரவும் வீடியோ!
  • Views: - 297

    0

    0