கண் இமைகள் அடர்த்தியாக வளர வீட்டில் இயற்கை சீரம் செய்வது எப்படி???

19 January 2021, 12:33 pm
Quick Share

அடர்த்தியான கண் இமைகளை பெற அனைவரும் விரும்புகிறோம். நம்மில் சிலர் இயற்கையாகவே அடர்த்தியான கண் இமைகளை பெற்றிருக்கிறோம். ஆனால் நீங்கள் குறைவான கண் இமைகளை பெற்ற நபராக இருந்தால், கவலைப்பட வேண்டாம், கண் இமைகள் தடிமனாக இருப்பதற்கு அற்புதமான தீர்வுகள் உள்ளன. இந்த பதிவில் வீட்டில் கண் இமை வளர்ச்சி சீரம் எப்படி செய்வது என பார்க்கலாம்.  

இயற்கை கண் இமை வளர்ச்சி சீரம்: 

வழக்கமாக இயற்கையான கண் இமை சீரம் ஆமணக்கு எண்ணெயுடன் ஒரு தளமாக தயாரிக்கப்படுகிறது.  ஆனால் மூலிகை சாற்றில் செய்யப்பட்ட சீரம் ஆமணக்கு எண்ணெய் சார்ந்த சீரம் விட நன்றாக வேலை செய்கிறது.  ஆமணக்கு எண்ணெய் போன்ற கண் இமை சீரம்  மூலிகை சாறுகளுக்கு சமமாக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ள மூலிகைகள் தேர்வு செய்யுங்கள். 

3 சிறந்த இயற்கை கண் இமை வளர்ச்சி சீரம்:- 

1. ரோஸ்மேரி கண் இமை வளர்ச்சி சீரம்: 

ரோஸ்மேரி அற்புதமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் விளைவுகள் ஆச்சரியமாக இருக்கும். உண்மையில் ரோஸ்மேரியுடன் செய்யப்பட்ட சீரம் கண் இமை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஆமணக்கு எண்ணெயைப் போலவே சமமாக பயனுள்ளதாக இருக்கும்.  உங்களுக்கு ஃபிரஷ்  ரோஸ்மேரி கிடைக்கவில்லை என்றால், உலர்ந்த ரோஸ்மேரியையும் பயன்படுத்தலாம். ரோஸ்மேரி சாறு தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில்  1/2 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய கொத்து ஃபிரஷ் ரோஸ்மேரியைச் சேர்த்து கொதிக்க விடவும். நீரின் நிறம் மாறும் வரை மற்றும் தண்ணீர் பாதியாகக் குறையும் வரை கொதிக்க விடவும். இதற்கு  சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் ஆகும். இது பாதியாகக் குறைந்துவிட்டால், அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டவும். 

2. மிளகுக்கீரை கண் இமை வளர்ச்சி சீரம்: 

மிளகுக்கீரை முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆச்சரியமாக இருக்கும் மற்றொரு மூலிகையாகும். இந்தியாவில் சில நர்சரிகளில் புதிய மிளகுக்கீரை தாவரங்கள் உள்ளன. மிளகுக்கீரை சாறு தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சில ஃபிரஷ் மிளகுக்கீரை இலைகளை சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கவும். நீரின் நிறம் மாறும் வரை மற்றும் தண்ணீர் பாதியாகக் குறையும் வரை கொதிக்க விடவும். இது பாதியாகக் குறைந்துவிட்டால், அடுப்பை அணைக்கவும்.    

3. கறிவேப்பிலை கண் இமை வளர்ச்சி சீரம்: கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்க கறிவேப்பிலை சிறந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் இது கண் இமை வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. உண்மையில் இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! இதன் வாசனை நன்றாக இருக்கும். கறிவேப்பிலை சாறு தயாரிக்க, 1/4 கப் கறிவேப்பிலை இலைகளை அம்மியில் நசுக்கி எடுக்கவும். இதனை 1/2 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறையும் வரை இது கொதிக்கட்டும். பின்னர் அடுப்பை அணைத்து விடலாம். 

DIY கண் இமை வளர்ச்சி சீரம் செய்வது எப்படி?

1. சீரம் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் நிறம் மற்றும் வாசனை திரவியம் இல்லாத 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். 

2. இப்போது மேலே நாம் தயார் செய்ததில் உங்களுக்கு விருப்பமான   சாற்றில் கால் கப் சேர்க்கவும்.   

3. கற்றாழை ஜெல்லில் சாறு நன்கு கலந்தவுடன், ஒரு வைட்டமின் ஈ காப்ஸ்யூலை சேர்க்கவும். வைட்டமின் ஈ காப்ஸ்யூலின் உள்ளடக்கங்களை நீங்கள் சேர்த்தவுடன், சீரம் சற்று பளபளப்பாக மாறும். நன்கு கலக்கவும். இப்போது உங்கள் சீரம் தயாராக உள்ளது! 

4. இப்போது ஒரு பழைய கண் இமை பாட்டிலை சுத்தம் செய்து அதில்  ஊற்றவும்.    

5. நிரப்பிய பின், பாட்டிலை  இறுக்கமாக மூடி, குளிரூட்டவும். குளிரூட்டப்பட்டிருந்தால், அது சுமார் இரண்டு வாரங்களுக்கு கெடாமல் இருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், அனைத்து மேக்கப்பையும் அகற்றிவிட்டு, இந்த சீரமை  கண் இமைகள் மீது தடவவும். ஒரு இரவு முழுவதும் விட்டு விடுங்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது 2 முதல் 3 வாரங்களில் நல்ல  முடிவுகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள். 
குறிப்புகள்: சிறந்த முடிவுகளுக்கு வண்ணம் மற்றும் வாசனை திரவியம் இல்லாத கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கண் இமை சீரம் குளிரூட்ட  மறக்க வேண்டாம். விரைவான முடிவுகளைக் காண தினமும் இதைப் பயன்படுத்த முயற்சிக்கவும்

Views: - 17

0

0