முக கவசம் அணியும் போது நம் முகத்தின் அழகு கெடாமல் பாதுகாக்க சில டிப்ஸ்!!!!

21 May 2020, 4:07 pm
how-to-protect-your-beauty-when-you-wear-mask
Quick Share

கொரோனா தொற்று காரணமாக தற்போது முக கவசம் அணிவது கட்டாயமாகி விட்டது. உலகமெங்கும் உள்ள சுகாதார மையங்கள் அனைத்தின் கடுமையான விதிமுறையாக இது இருக்கிறது. COVID-19 க்கு எதிராக இது ஓரளவிற்கு பாதுகாப்பு தரும் என்றாலும் இந்த முக கவசத்தை தொடர்ந்து அணிவதினால் பலருக்கு தடிப்புகள், பருக்கள், எக்ஸிமா போன்ற சருமம் சார்ந்த பிரச்சனைகளினால் அவதிப்படுகின்றனர். 

தொடர்ந்து முக கவசம் அணிந்து வரும்போது சருமத்தில் ஏற்படும் உள் வீக்கம் காரணமாக தான் இது போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. ஊரடங்கு ஆங்காங்கே பாதி அளவு தளர்க்கப்பட்டு மார்கெட் மற்றும் வேலை இடங்களில் பணிகள் தொடங்கலாயிற்று. இதனால் நிச்சயமாக நாம் முக கவசத்தை அணிந்து கொண்டே தான் இருக்க வேண்டும். இது போன்ற ஒரு சூழலில் உங்கள் சருமத்தை எவ்வாறு பராமரிப்பீர்கள்…???அது குறித்த ஒரு பதிவு இது. 

★முக கவசத்தை அணிவதற்கு முன்பாக உங்கள் முகத்தை நன்றாக கழுவி ஏதேனும் ஒரு மாஸ்ஷரைசர் கிரீமை பூசி கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும் வைத்து கொள்ள உதவும். அதிக நேரம் முக கவசம் அணியும் போது முகத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்காமல், முக கவசம் சருமத்தை உரசும் போது எரிச்சல் ஏற்படுகிறது. எனவே மாஸ்ஷரைசர் தடவி உங்கள் சருமத்தை வழவழப்பாக வைத்து கொண்டு இந்த சரும எரிச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

★சூரியனில் இருந்து வெளிவரும் ஆபத்தான UV கதிர்களிடத்தில் இருந்து நம்மை காத்து கொள்ள சன் ஸ்கிரீன் மிகவும் அவசியம். ஆனால் முக கவசம் அணிந்திருக்கும் போது லைட்டான சன் ஸ்கிரீன் அதுவும் மினரல்கள் சார்ந்த ஒன்றை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் முக கவசத்திற்கு பின்னால் இருக்கக் கூடிய சருமத்தில் தடவப்பட்டுள்ள சன் ஸ்கிரீன் சருமத்தை பாதிப்படைய செய்வதோடு முக கவசத்தின் தரத்தையும் மாற்றி விடும்.

★பழக்கமே இல்லாமல் முக கவசம் அணிய தொடங்கிய நீங்கள் நிச்சயமாக அடிக்கடி உங்கள் முகத்தை தொட முயற்சி செய்வீர்கள். எனவே அவ்வப்போது உங்கள் கைகளை சானிட்டைஸர் அல்லது சோப்பு கொண்டு கழுவுவது மிக முக்கியம்.

★முக கவசம் அணியும் போது கட்டாயமாக மேக் அப் போடுவதை அறவே தவிர்த்திடுங்கள். ஏனென்றால் சருமத்தில் உள்ள சிறு துளைகள் வாயிலாக மேக் அப் பொருட்கள் ஊடுருவி பிரச்சனையை உண்டு செய்ய நேரிடும். மேலும் முக கவசத்திற்கு உள்ளே உருவாக்கப்பட்டுள்ள சூடு உங்கள் மேக் அப் பொருட்களோடு இணைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

★முக கவசத்தில் பல வகைகள் உண்டு. இதில் துணியினால் ஆன முக கவசம் மீண்டும் மீண்டும்  பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். ஆனால் இதன் தரத்தை பார்த்து கொள்ள இதனை நீங்கள் அவ்வப்போது சானிட்டைஸ் செய்து கொள்வது அவசியம். சுத்தம் செய்யாமல் மீண்டும் அதே முக கவசத்தை பயன்படுத்தும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும். 

★முக கவசத்தை எப்போதும் இறுக்கமாக அணிய கூடாது. ஓரளவிற்கு லூசாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். மாஸ்கை இறுக்கமாக அணியும் போது முக கவசத்திற்கு உள்ளே இருக்கும் சருமத்தின் நிறம் மாறுபடுவதோடு அந்த இடத்தில் தழும்புகள் உண்டாக கூடும்.

★உங்கள் சருமத்தில் ஏதேனும் காயம் இருக்கும் பட்சத்தில் முக கவசம் அணியும் முன்பாக அதனை கவனித்து கொள்வது நல்லது. அதற்கென கொடுக்கப்பட்ட ஆயின்மென்ட்டை பயன்படுத்தி கொள்ளுங்கள். இல்லையெனில் அந்த காயத்தின் தீவிரம் அதிகமாக கூடும்.

★இறுதியில் இரவு வீட்டிற்கு வந்த பிறகு முக கவசத்தை கழற்றி விட்டு முகத்தை நன்றாக கழுவுங்கள். இது உங்கள் முகத்தில் படிந்துள்ள அழுக்குகள் அனைத்தையும் எடுத்து சருமம் தன்னை புதுப்பித்து கொள்ள வழி வகுக்கும்.

Leave a Reply