மருக்கள் உங்கள் முக அழகை கெடுக்கிறதா? இந்த டிப்ஸ் – ஐ பாலோ பண்ணுங்க, மருக்கள் காணாமல் போய்விடும்!

14 February 2020, 9:06 am
wart skin updatenews360
Quick Share

மருக்கள்   என்பது முகம், கழுத்து   மற்றும் நம் உடலில் வரக்  கூடியவை. இவை மச்சங்கள் போன்றும்  இருக்கும். இவை உடலுக்கு எந்த விதமான   பாதிப்பை ஏற்படுவதில்லை என்றாலும், நம் முக  அழகை கெடுக்கின்றன.    

இவை  ஆண்களை  விட பெண்களுக்குத்  தான் அதிகமாக வருகின்றன. கழுத்து, தோல்  பட்டை மற்றும் கண்களுக்கு கீழே தான் அதிகமாக   வருகின்றது.இவை சருமத்தில் இருந்தால் அழகை கெடுக்கும்   என்பதால், அதை முகத்திலிருந்து சிலர் பிடித்து இழுத்து விடுகின்றனர். ஆனால்  முகத்தில் அவை வேறு விதமான பிரச்சனையை உண்டாக்குகின்றன.

இதை   நீங்கள் அழகு   கலை நிபுணர்கள்  மற்றும் மருத்துவர்களை   அணுகி ஆலோசனை பெறலாம். இதற்கு   மாறாக நீங்கள் வீட்டு சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டு  மருத்துவ  முறை:

  • மருகு  வந்த ஆரம்ப காலங்களில்  நீங்கள் சரி செய்து விடலாம்.  பூண்டை நீர் சேர்க்காமல், அரைத்துக்  கொள்ளலாம். பின்பு அதை மருக்கள் மீது வைத்து  காயும் வரை விடலாம். இதே போல் தொடர்ந்து பத்து   நாட்கள் செய்து வந்தால், மருக்கள் உதிர வாய்ப்புள்ளது. 
  • கற்றாழை  ஜெல் மற்றும்  எலுமிச்சை சாற்றை   சரியான அளவு கலந்து மருக்கள்   இருக்கும் இடத்தில் தடவி வரலாம். பின்பு  சூடான நீர் கொண்டு ஒத்தனம் கொடுக்கலாம். இதே  போல் தொடர்ந்து செய்தால், மருக்கள் வழுவிழுந்து  விடும். பின்பு உதிர செய்யும்.
  • சிறிய   வெங்காயத்துடன், கல்  உப்பு சேர்த்து நீரை  சேர்க்காமல் அரைத்துக் கொள்ள  வேண்டும். மரு இருக்கும் இடங்களில்  இதை பூசி, பின்பு வெந்நீர் கொடுத்து  ஒத்தடம் கொடுக்கலாம். இதை தொடர்ந்து செய்தால்   பருக்கள் விழுவதை நீங்களே உணர்வீர்கள். மேற்கூறிய  சிகிச்சைகளை கழுத்து, தோல் மற்றும் அக்குள் போன்ற பகுதிகளில்  உள்ள மருக்களை போக்குவதற்கு பயன்படுத்தலாம்.
  • கண்களுக்கு  கீழே இருக்கும்  மருக்களை நீக்குவதற்கு நீங்கள்   தோல் நிபுணர்களை தொடர்பு கொள்வது  நன்மையாக இருக்கும்.
  • மருக்களை   ஆரம்பத்திலே   கண்டுபிடித்து மருத்துவரை அணுகினால்   உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். முகமும்  நன்கு ஜொலிப்புடன் இருக்கும். 
  • ஆனால்   வீட்டு வைத்திய   முறைகள் சிலது உங்கள் சருமத்திற்கு   ஏற்றாற் போல் இல்லாமல் இருக்கலாம். அதனால்   நீங்கள் இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது நன்மை  பயக்கும். சில மருக்கள் உதிர்ந்தாலும் திரும்ப திரும்ப வர வாய்ப்புள்ளது. 
wart skin updatenews360