கூந்தல் மற்றும் முகத்தை அழகாக்க முலாம்பழத்தை பயன்படுத்துவது எப்படி? உங்களுக்கான 5 சிம்பிள் டிப்ஸ்! 

25 March 2020, 5:32 pm
facial tips updatenews360
Quick Share

கோடை   காலத்தில்   உஷ்ணத்தை தணிக்க   முலாம்பழத்தை ஜூஸ் செய்தும்,  தோலை நீக்கியும் உண்பார்கள்.  அதே முலாம் பழத்தை வைத்து முகத்தை   அழகு படுத்துவது எப்படி என்பதை இதில் காண்போம். 

கிர்ணிப்பழத்தை   தான் முலாம் பழம்  எனவும் அழைப்பார்கள். இந்த   பழத்தில் புரதச்சத்தும், கொழுப்பு  சத்தும் உள்ளதால் சருமத்தை பொலிவாக்க   பயன்படுகின்றது.

facial tips updatenews360

டிப்ஸ்:


1.முகத்தில்   உள்ள எண்ணெய்   பசை குறைந்து, சருமம்   வறட்சியாக காணப்படுபவர்களுக்கு,   சிறிதளவு முலாம் பழ ஜூஸ் மற்றும்  வெள்ளரி ஜூஸ்- ஐ கலந்து முகத்தில்   தடவி விட வேண்டும். பின்பு அரை மணி   நேரம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.  இதை ஒரு வாரத்திற்கு தினமும் தொடர்ந்து செய்து  வந்தால் சருமத்தில் உள்ள வறட்சி மறைந்து, சருமம் இளமையாக   காட்சியளிக்கும்.

2. முலாம்   பழ விதையை  காய வைத்து பவுடராக்கிக்   கொள்ளுங்கள். பின்பு முலாம் பழ  விதை பவுடர் 100 கிராம்,ஓட்ஸ் பவுடர் 100 கிராம்  மற்றும் வெள்ளரி ஜூஸ் சிறிதளவு கலந்து கொள்ள  வேண்டும். இதை நன்கு பசை போல செய்து முகத்தில் அப்ளை  செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் முகம் முதல் பாதம் வரை   இதை தடவி குளித்து வந்தால் உடலானது குளிர்ச்சியாகவும், நல்ல   வாசனையுடனும் இருக்கும். ஓட்ஸ் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை   மறைத்து, முகத்தை பளிச்சிட செய்யும். முலாம் பழ விதை முடிக்கு நல்ல  கண்டிஷனராக செயல்பட உதவுகிறது.

3. சிலருக்கு   முகத்தில் வியர்வை   வந்து முகம் டல்லாக தோற்றமளிக்கும் தோற்றமளிக்கும்.  இதற்கு நன்கு பழுத்த முலாம் பழத்தை எடுத்து மசித்து   முகத்தில் பூச வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை   கழுவிக் கொள்ளலாம். இதனால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

4. நூறு கிராம் முலாம்   பழ விதையுடன் பயத்தம் பருப்பு, சீயக்காய் கால் கிலோ சேர்த்து  நன்கு மாவு போல அரைத்துக் கொள்ளவும். பின்பு இதனை வாரம்   ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் சுத்தமாவதோடு, நன்கு   பளபளப்புத் தன்மையுடனும் இருக்கும்.

5. இரண்டு தேக்கரண்டி முலாம்  பழ ஜூஸ் மற்றும் இரண்டு தேக்கரண்டி வெள்ளரி ஜூஸ் – ஐ   எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை   சாற்றை சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். பின்பு இதை ஒரு பாட்டிலில்  ஊற்றி அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை பிரிட்ஜில் வைக்கவும். இதை இயற்கை   நறுமண செண்டாக பய்னபடுத்தலாம். இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.தோலுக்கு   எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, இதனுடன் மணத்திற்காக பன்னீரும் சேர்த்து பயன்படுத்தலாம்.