உங்க வீட்ல செம்பருத்தி பூ இருக்கா… அப்போ இனி முடி உதிர்வு பிரச்சினைய மறந்துடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
12 May 2023, 9:52 am
Quick Share

இன்று முடி உதிர்வு பிரச்சினை இல்லாத ஒருவரை பார்ப்பதே அரிதாக உள்ளது. முடி உதிர்வை சமாளிக்க பல பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும் வீட்டு வைத்தியங்களுக்கு அது ஈடாகாது. அந்த வகையில் செம்பருத்தி பழங்காலத்திலிருந்தே முடி உதிர்தலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எனவே அவை முடி வளர்ச்சிக்கு நல்லது மற்றும் உச்சந்தலையில் pH ஐ மீட்டெடுக்க உதவுகின்றன. முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடியை நிர்வகிக்க செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒரு செம்பருத்தி பேஸ்ட் செய்ய நீங்கள் செம்பருத்தி பூக்களை அரைத்து பயன்படுத்தலாம் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடியை ஒரு சில டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் தடவி 15-20 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு அதை கழுவவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால், முடி உதிர்வைக் குறைக்கலாம்.

செம்பருத்திப் பொடியையும் தேங்காய் எண்ணெயையும் சம பாகமாகக் கலந்து வீட்டிலேயே செம்பருத்தி எண்ணெயைத் தயாரிக்கலாம். இந்த எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு விடுங்கள். உங்கள் பெட்ஷீட் மற்றும் தலையணை முழுவதும் எண்ணெய் படாமல் இருக்க ஷவர் கேப் அணியலாம்.

செம்பருத்தி பொடி மற்றும் தண்ணீரை சம பாகங்களில் கலந்து செம்பருத்தி ஷாம்பு செய்யலாம். இந்த ஷாம்பூவை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி முடி உதிர்வை குறைக்கலாம்.

உங்கள் வழக்கமான கண்டிஷனரில் ஒரு டேபிள் ஸ்பூன் செம்பருத்திப் பொடியைச் சேர்த்து பயன்படுத்தலாம். இது உங்கள் முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 341

0

0