இனி வீட்டிலே ஈசியாக செய்யலாம் வசீகரமான கண்மை…!!!

Author: Hema
14 September 2021, 9:29 am
Quick Share

ஆங்கிலத்தில் ‘காஜல்’ என்று அழைக்கப்படும் கண்மையானது இன்று பல பெண்களால் விரும்பி பயன்படுத்தப்படும் ஒரு அழகுசாதன பொருள் ஆகும். இது இந்திய துணைக் கண்டத்தில் அழகு மற்றும் ஒப்பனையின் ஒரு முக்கிய அம்சமாகும். மேக்கப்பில் பெரிதாக ஈடுபடாதவர்கள் கூட, கண்மை போட்டு கொள்வார்கள். இது அவர்களின் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் காஜல் பயன்பாடு ஒருவரின் கண்கள் பெரியதாகவும் வசீகரமானதாகவும் தெரிகிறது.

கடைகளில் விற்கப்படும் காஜலில் பல இரசாயன பொருட்கள் அடங்கி இருப்பதால் அது கண்களுக்கு பல விதமான தீங்குகளை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் தங்கள் வீட்டிலே கண்மை தயாரிக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கண்மை தயாரிப்பின் முழு செய்முறையை ஒழுங்காக அறியாமலும், இரசாயன பொருட்கள் அடங்கிய காஜலை பயன்படுத்துவதாலும் ஏற்படும் பல எதிர்மறை விளைவுகளில் ஒன்று, ஒவ்வாமை ஆகும். இதில் கண்களில் நீர் வடிதல், எரிச்சல், அரிப்பு மற்றும் கண்களின் சிவத்தல் ஆகியவை அடங்கும். அதுமட்டுமின்றி கார்னியல் அல்சர் மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் கடுமையான சூழ்நிலைகளிலும் இது முடிவடையலாம். எனவே ஒருவர் தங்கள் வீட்டில் காஜல் தயாரிக்கத் தேர்வு செய்கிறார் என்றாலும் கூட கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பான முறையில் கண்மை எப்படி தயாரிப்பது என இப்போது தெரிந்து கொள்வோம்.

செயல்முறை1:-
தேவையான பொருட்கள்:
– தூய நெய் அல்லது நல்லெண்ணெய்
– விளக்கு
– அடர்த்தியான பருத்தி திரி
– காப்பர் தட்டு

செய்முறை:
* விளக்கில் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும்.
* விளக்கில் திரியை வைத்து அதனை ஏற்றவும்.
* விளக்கின் மேல் செப்புத் தகட்டை வைத்து ஒரு இரவு முழுவதும் எரிய விடவும்.
* செப்புத் தகட்டின் மேல், அடர்த்தியான கருப்பு எச்சம் உருவாகும்.
* இருண்ட எச்சத்தின் மீது சிறிதளவு எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றவும்.
* எச்சத்தை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் தேய்க்கவும். ஒரு வேலை அது தடிமனாகவோ, அல்லது கட்டியாகவோ இருந்தால் நன்கு கலக்கவும்.
* மீதமுள்ள அனைத்து எச்சங்களையும் காற்று புகாத ஒரு டப்பாவில் சேமித்து வைக்கவும். குறைந்தபட்சம் 2-4 மணி நேரம் இதனை குளிரூட்டவும்.
* மிகவும் மென்மையான தோற்றத்திற்கு, நல்ல கண்மை பிரஷ் பயன்படுத்தவும். நீங்கள் ஒரு வியத்தகு கண் தோற்றத்தை உருவாக்க விரும்பினால், ஒரு டிப்பைப் பயன்படுத்தி உங்கள் கீழ் கண் இமைகளில் காஜலை தடவவும்.

செயல்முறை2:-
தேவையான பொருட்கள்:
4-5 பாதாம்
சிறிதளவு கற்றாழை ஜெல் தேங்காய் எண்ணெய் சாமணம்
ஒரு தட்டு அல்லது ஒரு பீங்கான் கிண்ணம்

செய்முறை:
* பாதாம் பருப்பை வாயு நெருப்புக்கு அருகில் வைத்து அதனை வாட்டவும்.
* சுமார் 10 நிமிடங்கள் அல்லது மிருதுவாகும் வரை தொடர்ந்து அதனை எரிய விடுங்கள்.
* வறுத்த பாதாம் பருப்பை அரைத்து பேஸ்ட் தயாரிக்கவும்.
* முற்றிலும் மென்மையாகும் வரை கலக்கவும்.
* சிறிதளவு ஃபிரஷான கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
* அதன் பிறகு, பாதாம் பொடியை கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் இணைக்கவும்.
* தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு அது சூடாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* நீங்கள் இப்போது காஜலை காற்று புகாத ஒரு டப்பாவில் சேமித்து வைத்து, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Views: - 149

0

0

Leave a Reply