வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்தால் இனி உங்க சீப்பில் ஒரு தலைமுடி கூட இருக்காது…!!!

17 September 2020, 10:00 am
Quick Share

நமது தோலையும் முடியையும் கவனித்துக் கொள்ள வீட்டு வைத்தியம் போல சிறந்தது வேறொன்றும் இல்லை.  ஆரோக்கியமான முடியை பராமரிக்க வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்துவது என இந்த பதிவில் பார்ப்போம்.  உச்சந்தலையில் வெங்காய சாறு பல மாயாஜாலங்களை செய்யக்கூடும்.  இதற்கு நமக்கு இரண்டு சிவப்பு வெங்காயம் தேவைப்படும். வெங்காயத்தின் தோலினை நீக்கி அதனை அரைத்து கூழாக்கி கொள்ளுங்கள்.  பின்னர் சாற்றை வடிகட்டவும். இந்த சாற்றினை உச்சந்தலையில் தடவவும்.  சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து ஒரு மணி நேரம் விட்டுவிட்டு கழுவவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும். 

முடி உதிர்தலை நிறுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் இது செய்யப்படுகிறது. இதற்கு வெங்காய சாறு மட்டுமே போதுமானது. நீங்கள் விரும்பினால் தேங்காய் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு கூட சேர்க்கலாம். அதாவது வெற்று வெங்காய சாறு பயன்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் அதை தேங்காய் எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறுடன் கலக்கலாம். உண்மையில், இந்த இயற்கை மூலப்பொருள் முடிக்கு பயனளிக்கும் என்று அறியப்படுகிறது.

கூந்தலுக்கு வெங்காய சாற்றின் நன்மைகள்:

அமினோ அமிலங்களில் காணப்படும் சல்பர்  வெங்காயத்தில்  நிறைந்துள்ளது. அவை புரதத்தின் கூறுகள். புரதங்களுக்குள், கெராடின் குறிப்பாக சல்பர் நிறைந்ததாக அறியப்படுகிறது மற்றும் வலுவான கூந்தலுக்கு இது தேவைப்படுகிறது. சல்பர் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவும் என்று அறியப்படுகிறது. முடி மற்றும் உச்சந்தலையில் வெங்காய சாறு பயன்படுத்துவதால் மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.  எனவே, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. இருப்பினும், இது தற்போதைய முடியின் வளர்ச்சியைப் பாதுகாக்கவோ அல்லது தூண்டவோ முடியும் என்றாலும், முடி உதிர்தல் தொடர்பான பிரச்சனையை  இதனால் மாற்ற முடியாது.

Views: - 0 View

0

0