நுனி முடி வெடித்து காணப்படுகிறதா… இந்த ஐந்து ஆயில் உங்களுக்கு யூஸ் ஆகும் பாருங்க!!!

4 March 2021, 8:15 pm
Quick Share

பெரும்பாலான பெண்களுக்கு தற்போது தலைமுடி நுனியில் வெடித்து காணப்படுகிறது. அவ்வப்போது நுனி முடியை வெட்டி எடுத்தாலும் இந்த பிரச்சினை மீண்டும் மீண்டும் வரும். ஆனால் இந்த பிளவு முனைகளை தடுக்க இயற்கையான பல வழிகள் உண்டு. பொதுவாக நுனி முடி மிகவும் மெல்லியதாகவும் இருக்கும். இதனால் இது எளிதில் பிளவுபட்டு விடும். இதற்கு ட்ரைகோப்டிலோசிஸ் என்று பெயர். 

இந்த பிளவு முனைகளை நாம் கவனிக்காமல் விடும்போது தலைமுடியானது இறகு போல மாறிவிடும். சரியான முடி பராமரிப்பு இல்லாமை, இரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகளை பயன்படுத்துவது, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை இந்த பிளவு முனைக்கு காரணமாக இருக்கலாம். இதனை இயற்கையான கண்டிஷனர் பயன்படுத்தி சரி செய்யலாம்.அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

1. தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர். பிளவு முனையை இயற்கையாகவே சரி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. தேங்காய் எண்ணெயில் உள்ள நடுத்தர கொழுப்பு அமிலங்கள் தலைமுடியில் எளிதில் ஊடுருவுகிறது. தலைமுடியை ஈரப்பதமாக வைப்பது கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. பிளவு முனையை சரி செய்ய நுனி பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்.முதல் நாள் இரவு கூந்தல் முழுவதும் நன்றாக எண்ணெயை தடவி கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் ஷாம்பு போட்டு அலசி கொள்ளலாம்.

2. ஆர்கான் எண்ணெய்:

ஆர்கான் எண்ணெய் திரவ தங்கம் என்று கூறப்படுகிறது. தலைமுடியை பாதிப்பிலிருந்து காப்பாற்றும் பண்புகள் இதற்கு உண்டு. ஆர்கான் எண்ணெயில் வைட்டமின் E, கொழுப்பு அமிலங்கள்,

ஆர்கான் எண்ணெயில் இரண்டு சொட்டுகள் எடுத்து தலைக்கு குளித்த பிறகு ஈரமான முடியில் தடவி கொள்ளுங்கள். தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இதனை பயன்படுத்துங்கள். 

3. விளக்கெண்ணெய்:

இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த எண்ணெய் பிசுபிசுப்பாக இருந்தாலும் தலைமுடி மயிர்க்கால்கள் வரை ஊடுருவி தலைமுடிக்கு பலம் சேர்க்கும். நமைச்சல், பிளவு முனை ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது. நான்கு தேக்கரண்டி விளக்கெண்ணெயோடு இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய கலந்து முடியின் வேர்கள் முதல் நுனி வரை நன்கு தடவவும். இதனை இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் ஷாம்பூ போட்டு அலசுங்கள்.

4. மீன் எண்ணெய்:

மீன் எண்ணெய் தலைமுடி வளர்ச்சியை தூண்டுகிறது  என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிளவு முனைகளை சரி செய்வதில் இது சிறந்து விளங்குகிறது. மீன் எண்ணெயோடு ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து பயன்படுத்தும் போது அது சிறப்பாக செயல்படுகிறது. இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் ஷாம்பூ போட்டு கழுவி கொள்ளவும்.

5. பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெய் தலைமுடியை ஈரமாக்கி அதற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. நான்கு முதல் ஆறு தேக்கரண்டி வரை பாதாம் எண்ணெயை எடுத்து அதனை லேசாக சூடாக்கி வெதுவெதுப்பான பதத்தில் வேர்கள் முதல் நுனி முடி வரை தடவவும். இதனை வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்த பின்னர் இரண்டு மணி நேரம் ஊற விடவும். பிறகு ஷாம்பூ செய்து கொள்ளுங்கள். வாரத்தில் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

Views: - 49

0

0