ஹீரோயின் போல தக தகவென்று வெள்ளையாக மாற தினமும் இந்த பொடி ஒரு ஸ்பூன் போட்டு குளித்தாலே போதும்!!!

7 November 2020, 11:34 pm
Quick Share

ஒரு சிலரை பார்த்தவுடனே தெரிந்து விடும். முகம் மட்டும் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். கை, கால், கழுத்து ஆகிய மற்ற பகுதிகள் கருப்பாக தெரியும். ஆனால் முகம் மட்டும் வெள்ளையாக இருந்தால் போதாது. சினிமா ஸ்டார்களை போல உடல் முழுவதும் தக தகவென்று மின்ன வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்கு இந்த குறிப்பு நிச்சயமாக உதவும். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் தயாரிக்கக்கூடிய ஒரு குளியல் பொடியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

இந்த குளியல் பொடியை தயாரிக்க நமக்கு ஐந்து தேக்கரண்டி கசகசா, இரண்டு தேக்கரண்டி பச்சை பயறு, மூன்று தேக்கரண்டி உளுந்து, இரண்டு தேக்கரண்டி பச்சரிசி ஆகியவை தேவைப்படும். இந்த பொருட்கள் அனைத்தையும் சரியான அளவில் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். 

அரைக்கும் போது பொடி நல்ல நைசாக இருப்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அப்போது தான் குளிக்கும் போது சௌகரியமாக இருக்கும். இந்த பொடியை காற்று உள்ளே செல்லாத ஒரு டப்பாவில் போட்டு தண்ணீர் எதுவும் படாமல் வைத்து கொண்டால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். அதிகப்படியாக அரைத்து வைத்து கொள்ளாதீர்கள். பத்து நாட்களுக்கு தேவையான பொடியை மட்டும் தயார் செய்து கொள்ளுங்கள். அவ்வப்போது ஃபிரஷாக அரைத்து பயன்படுத்துவதே சிறந்தது. 

இனி இந்த பொடியை பயன்படுத்தும் முறை குறித்து பார்ப்போம். ஆயில் சருமம் உள்ளவர்கள் இந்த பொடியோடு தண்ணீர் ஊற்றி குழைத்து உடல் முழுவதும் பூசி தேய்த்து குளிக்கலாம். டிரை ஸ்கின் கொண்டவர்கள் பொடியுடன் தயிரை கலந்து உடம்பில் பூசி ஐந்து நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் குளித்து விடலாம். ஊற வைக்கும் சமயத்தில் மசாஜ் செய்து கொள்வது நல்ல பலன் தரும். 

இந்த பொடியை பயன்படுத்தி குளித்த பிறகு சோப்பு போட்டு மீண்டும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பொடி வாசனையாக இல்லையே என்று உங்களுக்கு தோன்றினால் இந்த பொடியோடு இரண்டில் இருந்து மூன்று சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்தி வாருங்கள். ஒரு வேலை உங்களுக்கு சோப்பு போட்டு குளித்தால் தான் திருப்தியாக இருக்கும் என்றால் சோப்பு பயன்படுத்திய பிறகு நாம் தயார் செய்து வைத்த பொடியை தேய்த்து கொள்ளுங்கள். 

இதனை தொடர்ந்து பத்து நாட்கள் பயன்படுத்தி வந்தாலே நிச்சயமாக உங்களுக்கே நல்ல ரிசல்ட் தெரியும்.எந்த வித செயற்கையான பொருட்களையும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நீங்கள் வெள்ளையாகி விடுவீர்கள். குறிப்பாக இதனால் எந்த வித சைடு எஃபெக்ட்டும் உண்டாகாது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் இந்த குளியல் பொடியை நரநரவென்று மட்டும் அரைக்க வேண்டாம். பொடி நைசாக தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதில் மட்டும் கவனம் செலுத்தி கொள்ளுங்கள். 

Views: - 158

0

0